துருக்கியில் கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு: நீரில் மூழ்கி 18 பேர் பலி
அங்காரா: துருக்கி அருகே அகதிகளை ஏற்றிச் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்தவர்களில் 18 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் கடலில் தத்தளித்த 15 பேரை அந்நாட்டு கடலோர காவல்படையினர் உயிருடன் மீட்டனர்.
உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். அவ்வாறு அகதிகளாக செல்பவர்கள் முதலில் துருக்கியை அடைந்து அங்கிருந்து கிரீஸ் சென்று பின்னர் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

துருக்கியில் இருந்து கிரீஸ் செல்ல அவர்கள் கடல் மார்க்கமான பயணத்தை மட்டுமே மேற்கொள்ளும் நிலை உள்ளது. மேலும் மரப்படகுகள் மற்றும் ரப்பர் படகுகள் போன்றவற்றில் அதிகமான பயணிகளை ஏற்றி செல்வதால் பல நேரங்களில் நடுக்கடலில் படகு பழுதாகி விபத்துகள் ஏற்படுகிறது.
இந்நிலையில்,துருக்கியில் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகளை ஏற்றி கிரீஸூக்குச் சென்று கொண்டிருந்த படகு ஒன்று துருக்கி நாட்டில் உள்ள டிடிம் நகரின் அருகேயுள்ள ஏய்ஜியன் கடற்பகுதியில் நேற்று கவிழ்ந்தது. இதில் 18 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த துருக்கி கடலோர காவல்படையினர் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 15 பேரை உயிருடன் மீட்டனர். மேலும் பலர் மாயமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. மீட்பு படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications