துனிசியா நாடாளுமன்றம் அருகே திடீர் துப்பாக்கிச் சூடு: 17 வெளிநாட்டவர் உட்பட 19 பேர் பலி!
டுனிஸ்: துனிசியா நாடாளுமன்றம் அருகே உள்ள மியூசியத்துக்குள் நுழைந்த ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலியாகினர். இத்தாக்குதலை நடத்திய 2 ஆயுததாரிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை நடத்தியது ஐ.எஸ். தீவிரவாத இயக்கமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான துனியாவின் நாடாளுமன்றம் அருகே உள்ளது புகழ்பெற்ற பார்டோ மியூசியம். இன்று பகலில் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் திடீரென மியூசியத்துக்குள் நுழைந்தனர்.

பின்னர் மியூசியத்தைப் பார்வையிட பேருந்தில் வந்த வெளிநாட்டவர் மீது கண்மூடித்தனமாக அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் மேலும் 10 வெளிநாட்டவரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர் ஆயுததாரிகள்.
பிணைக் கைதிகளை மீட்க ராணுவம் ஆயுததாரிகள் மீது துனிசியா ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் பிணைக் கைதிகள் தம் வசம் இருந்த 10 வெளிநாட்டவரையும் கொன்றுவிட்டனர். ஒருவழியாக ஆயுததாரிகளை துனியா ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
ஆயுததாரிகளின் தாக்குதலில் மொத்தம் 19 பேர் பலியாகினர். இதில் 17 பேர் வெளிநாட்டவர். 2 பேர் துனிசியா நாட்டவர்.
அரபு வசந்தம் என்ற ஆட்சி மாற்றப் புரட்சியை எதிர்கொண்டிருந்தது துனிசியா. அதே நேரத்தில் சிரியா மற்றும் ஈராக்கில் தனி இஸ்லாமிய அரசை நிறுவியிருக்கும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் துனிசியா நாட்டைச் சேர்ந்தோர் பெருமளவில் இணைந்துள்ளனர்.
அண்மையில் கூட, துனிசியா மக்கள் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது என்று சமூக வலைதளங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த ஆயுததாரிகளும் ஐ.எஸ். இயக்கத்தினராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் துனிசியா நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதுதான் இந்த ஆயுத கும்பலின் இலக்காக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது, இந்த சம்பவம் துனிசியாவில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications