உலக வரலாற்றிலேயே முதல்முறையாக..: வால் நட்சத்திரத்தில் தரையிறங்கிய விண்கலம்
பெர்லின்: 10 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்ட ரோசெட்டா விண்கலத்தில் இருந்து ஃபிலே என்ற லேண்டர் 67பி/சுரிமோவ்-கெரசிமென்கா என்ற வால் நட்சத்திரத்தில் புதன்கிழமை வெற்றிகரமாக தரையிறங்கியது.
வால் நட்டசத்திரங்களின் தோற்றம், வளர்ச்சி பற்றி ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியன் கடந்த 2004ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி ரோசெட்டா விண்கலத்தை விண்ணில் ஏவியது. அதில் ஃபிலே என்ற 100 கிலோ எடையுள்ள லேண்டர் இணைத்து அனுப்பி வைக்கப்பட்டது.

10 ஆண்டு விண் பயணம்:
இந்த விண்கலம் ரூ.9 ஆயிரத்து 600 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. 67பி என்ற வால் நட்சத்திரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட ரோசெட்டா 10 ஆண்டுகளாக 6.4 பில்லியன் மைல் தொலைவு பயணம் செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் வால் நட்சத்திரத்தை அடைந்தது.

முதல் முறை:
இதையடுத்து ரோசெட்டாவில் இணைக்கப்பட்ட ஃபிலே லேண்டர் நேற்று காலை 3.30 மணி அளவில் அதில் இருந்து பிரிந்து வால் நட்சத்திரத்தில் தரையிறங்கத் தயாரானது. ரோசெட்டாவில் இருந்து பிரிந்து 7 மணிநேரம் கழித்து மாலை 4.03 மணிக்கு ஃபிலே வால் நட்சத்திரத்தில் பத்திரமாக தரையிறங்கியது. வால் நட்சத்திரத்தில் லேண்டர் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. வால் நட்சத்திரத்தில் பூமியில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு கலம் தரையிறங்கியுள்ளது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சேதமில்லாமல்...
ஃபிலே வால் நட்சத்திரத்தின் தரையில் சில முறை மோதி, பவுன்ஸ் ஆகி பிறகு மீண்டும் தரையிறங்கியுள்ளது. இதில் ஃபிலேவுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

500 மில்லியன் கி.மீ. தொலைவில்...
67பி வால் நட்சத்திரம் பூமியில் இருந்து 500 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஃபிலே லேண்டர் வால் நட்சத்திரத்தில் 9 வகை ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications