தோஹா பஸ் நிலையத்தில் பயங்கரம்.. கூட்டத்தில் பஸ் பாய்ந்ததில் 2 இந்தியர்கள் உள்பட 4 பேர் பலி
தோஹா: கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் வேகமாக வந்த பஸ் பாய்ந்து மோதியதில் இரண்டு இந்தியர்கள் உள்பட 4 வெளிநாட்டினர் பலியானார்கள்.
உயிரிழந்த இந்தியர்களான கான் முகம்மது முபீன் (33), ஜெஸ்வான் சஞ்சய் குமார் (35) ஆகிய இருவரும் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்தர்கள். முபீன் ரேபரேலியைச் சேர்ந்தவர். சஞ்சய் குமாரின் சொந்த ஊர் லக்னோ ஆகும்.

இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் இருவரும் தோஹா பஸ் நிலையத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்தபோது திடீரென வேகமாக வந்த பஸ் அங்கு நின்றிருந்தவர்கள் மீது மோதியது. இதில் இவர்கள் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். நால்வருமே வெளிநாட்டினர் ஆவர்.
பிரிஜ் அல் கனிம் என்ற இடத்தில் இந்த விபத்து வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. இந்தியர்கள் தவிர உயிரிழந்த மற்ற இருவரும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் பெண் ஆவார்.












Click it and Unblock the Notifications