2 ரஷ்ய விமானங்கள் கடத்தப்பட்டன... ஒரு விமானம் மாஸ்கோவை நோக்கிச் செல்வதாக தகவல்
மாஸ்கோ: ரஷ்யாவில் இரு சிறிய ரக விமானங்கள் கடத்தப்பட்டுள்ளன. அதில் ஒரு விமானம் விபத்துக்குள்ளாகி விட்டதாகவும், இன்னொரு விமானம் தலைநகர் மாஸ்கோவை நோக்கிச் செல்வதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த இரு விமானங்களும் ரஷ்யாவின் டியூமன் பிராந்தியத்திலிருந்து கடத்தப்பட்டுள்ளன. எந்தவித அனுமதியும் தகவலும் இல்லாமல் இரு விமானங்களும் இஷிம் நகரிலிருந்து கிளம்பியுள்ளன.

இதுகுறித்து யூரல் பெடரேஷன் மாவட்ட விசாரணை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடையாளம் தெரியாத சிலர் இந்த விமானங்களை எடுத்துச் சென்றுள்ளனர். அவர்கள் முறையான அனுமதி பெறவில்லை.
அவை கடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இருப்பினும் அதை உறுதிப்படுத்த முடியவில்லை. தற்போது ஒரு விமானம் மாஸ்கோவை நோக்கிச் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.
இரண்டு விமானங்களில் ஒன்று தனியார் கார்டன் ஜிஒய் 80-160 ரக விமானமாகும். இந்த விமானத்தை எடுத்தச் சிறிது நேரத்தில் அது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விழுந்து விட்டது. ஆனால் அந்த விமானத்தில் பயணித்தவர்கள் உயிருடன் தப்பியதாக கூறப்படுகிறது. அவர்கள் யாக் 52 ரக விமானத்தை எடுத்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications