7 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து.. கர்ப்பிணி உள்பட 20 பேர் கருகி சாவு.. இந்தோனேஷியாவில் சோகம்

Subscribe to Oneindia Tamil

ஜகர்தா: இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் சிக்கி ஒரு கர்ப்பிணி உள்பட மொத்தம் 20 பேர் உடல் கருகி இறந்தனர்.

இந்தோனேஷியா தலைநகராக ஜகர்தா உள்ளார். இங்குள்ள 7 அடுக்குமாடி கட்டடத்தில் இன்று திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இந்த கட்டடத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

indonesia jakarta

இந்நிலையில் தான் அடுக்குமாடி கட்டடத்தின் முதல் தளத்தில் தீ பற்றி எரிந்தது. இந்த தீ அடுத்தடுத்து பரவியது. இதுபற்றி உடனடியாக தீயணைப்பு வீரர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்தவர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் கரும்புகை அதிகரித்தது. முதல் தளத்தில் இருந்த தீ ஜன்னல் வழியாக மேல்நோக்கி சென்றது. கரும்புகை அடுத்தடுத்த இடங்களுக்கு பரவியது. இதனால் தீயை அணைக்கும் பணி பெரும் சவாலாக இருந்தது.

இதனால் தீயில் சிக்கி கர்ப்பிணி உள்பட 20 பேர் பலியாகினர். மேலும் கட்டடத்தின் மேல்பகுதியில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுபற்றி ஜகர்தா மத்திய போலீஸ் பிரிவின் தலைவராக சுஷாடோ பர்னோமோ காண்ட்ரோ கூறுகையில், ‛‛கட்டடத்தில் சிக்கிய 20 பேரை மீட்டுள்ளோம். இதில் 5 ஆண்கள், 15 பெண்கள் அடங்குவர். வேறு யாராவது சிக்கி உள்ளார்களா? என்பது பற்றி தேடி வருகிறோம்'' என்றார்.

தீப்பிடித்து எரிந்த கட்டடத்தில் டெரா ட்ரோன் இந்தோனேஷியா என்ற நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் ட்ரோனை பயன்படுத்தி மேற்கொள்ளும் சர்வே பணிகளை செய்து வருகிறது.குறிப்பாக விவசாய துறைகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தீ விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவில்லை.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் ஜகர்தாவில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+