தனிமைப்படுத்தப்படாத பயணிகள்.. கொரோனா அபாயம்.. நடுக் கடலில் கப்பலில் தவிக்கும் 200 இந்தியர்கள்!
Recommended Video
டோக்கியோ: கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்த கப்பல் 200 இந்தியர்களுடன் நடுக்கடலில் தவித்து வருவதால் தங்களை மீட்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவி 400-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சீனாவிலிருந்து வரும் பொருட்களையும் சுற்றுலா பயணிகளையும் பெரும்பாலான நாடுகள் தடை விதித்துள்ளன.

கொரோனா வைரஸ்
இந்த நிலையில் ஹாங்காங்கிலிருந்து 3700-க்கும் மேற்பட்டோருடன் ஜப்பான் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா பீதியால் அந்த கப்பல் யோக்கோஹாமா துறைமுகம் அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் உள்ள 64 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த 64 பேரும் தனிமைப்படுத்தப்படாமல் ஒரே கப்பலில் இருப்பது கொரோனா வைரஸ் பாதிப்பில்லாதோருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

மம்தா பானர்ஜி
இதனால் சீனாவில் உள்ள வுகான் நகரில் இந்தியர்களை மீட்டது போல் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்பில்லாத 200-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்குமாறு மேற்கு வங்க மாநிலத்தவர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோவில் கூறுகையில் விதிகளை மீறி நான் பேசியது தவறுதான்.

நிறுத்தி
இப்படி பேசாமல் இருந்தால் நாளை நான் உயிரோடு இருப்பேனா, அல்லது இறந்துவிடுவேனா என எனக்கு தெரியவில்லை என தெரிவித்திருந்தார். இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெயசங்கர் வெள்ளிக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் கப்பலில் இருப்போர் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்திய ஊழியர்களும் பயணிகளும் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் இருக்கின்றனர்.

அபாயம்
தூதரகத்தின் தகவலின் அடிப்படையில் அவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது என்றார். இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை நடுக்கடலில் நிறுத்தப்பட்ட இந்த கப்பலில் ஒருவரின் நிலை மோசமாக உள்ளது. கப்பலில் உள்ள வயதானோருக்கு நோய் பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications