ஆன்மாவை 28 ஆயிரத்திற்கு ஏலம்விட்ட இளைஞர்.. என்எஃப்டியில் ஏலம் விட்டதால் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

அயர்லாந்து: டச்சு நாட்டில் 21 வயது மாணவர் ஒருவர் தனது ஆன்மாவை என்எஃப்டி மார்கெட்டில் ஏலம் விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெதர்லாந்தை சேர்ந்தவர் ஸ்கைக். இவர் ஓபன் ஸீ மார்க்கெட்டில் சாயில் ஆஃப் ஸ்டினஸ் என்ற பெயரில் விற்பனை விளம்பரத்தை பதிவிட்டிருந்தார்.

அந்த விளம்பரத்தில் ஹலோ நீங்கள் யாரேனும் ஆன்மாவை வாங்க விரும்புகிறீர்களா, எனது ஆன்மாவை வாங்கிக் கொள்ளலாம்.

இஷ்ட தெய்வம்

இஷ்ட தெய்வம்

இதை வாங்கி உங்களின் இஷ்ட தெய்வத்திற்கு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ பலி கொடுக்கலாம்" என பதிவிட்டிருந்தார். மேலும் சேல் ஆப் சோல் அக்ரீமென்ட் அதாவது ஆன்மா விற்பனைக்கான ஒப்பந்த பத்திரம் என கூறி ஒரு ஆவணத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

என்எஃப்டி

என்எஃப்டி

இதுவரை என்எஃப்டியில் ஏலத்தில் விடப்பட்டதிலேயே இந்த ஆன்மாவுக்குதான் அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். என்எஃப்டி என்பது பிளாக் செயின் தொழில்நுட்பம் ஆகும். இதை அடிப்படையாகக் கொண்டுதான் கிரிப்டோகரன்சி, என்எஃப்டி போன்றவை செயல்படுகின்றன.

என்எஃப்டி என்றால் என்ன

என்எஃப்டி என்றால் என்ன

என்எஃப்டி என்றால் Nonfungible tokens என்பதாகும். கொரோனா காலகட்டத்தில் நிறைய பேர் இதில் முதலீடுகளை செய்திருந்தனர். பாடல்கள், வீடியோக்கள், மீம்ஸ்களை இங்கு விற்பனை செய்யலாம். தமிழகத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது 6 பாடல்களை என்எஃப்டி மூலம் ஏலம் விட்டார்.

எத்தனை விலை

எத்தனை விலை

அதன் மூலம் 5 எரித்தீயத்தை ஈட்டினார். அந்த வகையில் 21 வயது இளைஞர் தனது ஆன்மாவை 0.11 எரித்தியம் என விலை நிர்ணயம் செய்துள்ளார். இது இணையதளத்தில் டிரென்டாகி வருகிறது. வீட்டு உபயோக பொருட்கள், நிலங்கள், வீடுகள், பர்னிச்சர்கள், பெட் அனிமல்கள் என ஏலம் விடப்பட்டு வந்த நிலையில் இளைஞர் ஒருவர் தனது ஆன்மாவை ஏலம் விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+