ஆப்கானில் 24 மணிநேரத்தில் 22 தாலிபான்கள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
காபூல்: ஆப்கானிஸ்தானில் தேசிய பாதுகாப்பு படை மற்றும் நேட்டோ படையினர் சேர்ந்து கடந்த 24 மணிநேரத்தில் 22 தாலிபான்கள் போராளிகளை கொன்றுள்ளனர் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் உருஸ்கான், கந்தஹார், காஸ்னி மற்றும் ஹெராத் ஆகிய மாகாணங்களில் ஆப்கான் தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் நேட்டோ படையினர் சேர்ந்து தீவிரவாதிகளை அழிக்கும் முயற்சியில் கூட்டாக ஈடுபட்டனர்.

இதில் அந்த நான்கு மாகாணங்களில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 22 தாலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த கூட்டு முயற்சியில் ராணுவத்தினர் யாராவது உயிர் இழந்தார்களா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications