26/11 தாக்குதலுக்கு மாஸ்டர் மைண்ட்! ஹபிஸ் சயத்தின் நெருங்கிய கூட்டாளி சுட்டுக்கொலை! பரபர பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: 26/11 மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த லஷ்கர் இ-தொய்பா அமைப்பின் மாஸ்டர் மைண்ட் ஹபிஸ் சயத்தின் நெருங்கிய கூட்டாளியான முப்தி கைசர் பாரூர் பாகிஸ்தானனில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் அதுபற்றிய திடுக்கிடும் தவல் வெளியாகி உள்ளது.
2008.. நவம்பர் 26.. இந்தியாவை பொறுத்தமட்டில் மிகவும் சோகமான நாளாகும். அன்றைய தினம் யாரும் எதிர்பாராத வகையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தினர்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் நவீன துப்பாக்கிகளுடன் தெற்கு மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல், டிரிடெண்ட் ஹோட்டல், சிஎஸ்டி ரயில் நிலையம், காமா மருத்துவமனை, யூதர்களின் வழிபாட்டுத்தலம் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக சுட்டனர்.
இதில் மொத்தம் 175 பேர் வரை பலியாகினர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ-தொய்பா தீவிரவாத அமைப்பால் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் நவம்பர் மாதம் (11வது மாதம்) 26ம் தேதி நடந்ததால் 26/11 என அழைக்கப்படுகிறது. இந்த கொடூரமான தாக்குதலை லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு நிகழ்த்தியது. கராச்சி துறைமுகத்திலிருந்து சாட்டிலைட் போன்களுடன் மும்பைக்கு படகுகளில் வந்து அவர்கள் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
இந்த தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக வலம் வருகின்றனர். அவர்களை நீதியின் முன் நிறுத்த பாகிஸ்தான் அரசு இன்னும் முன்வரவில்லை. தொடர்ந்து தீவிரவாதிகளை பாகிஸ்தான் அரவணைத்து வருகிறது. இந்த மும்பை தாக்குதலுக்கு மாஸ்டர் மைண்ட்டாக இருந்தவர் லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் செல்வாக்கு பெற்ற தலைவரான ஹபீஸ் சயத் ஆவார்.
இவர் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் பாகிஸ்தானிலேயே இருப்பதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் தான் ஹபீஸ் சயத்தின் நெருங்கிய கூட்டாளியுமான முப்தி கைசர் பாரூக் பாகிஸ்தான் கராச்சியில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை அடையாளம் தெரியாத நபர் சுட்டுக்கொலை செய்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் பத்திரிகையான Dawn செய்தி வெளியிட்டுள்ளது. அதில், கராச்சியில் உள்ள சாமனாபாத் பகுதியில் 30 வயது நிரம்பிய முப்தி கைசர் பாரூக் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது ஒரு குறிவைத்து நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதலாகும். துப்பாக்கிச்சூட்டில் குண்டு காயமடைந்து உயிருக்கு போராடியவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்கிடையே முப்தி கைசர் பாரூக் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் என்று இணையதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் சிலர் கூட்டமாக நடந்து வருகின்றனர். அப்போது திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது. இதில் ஒருவரின் உடலில் குண்டு பாய்கிறது. இதையடுத்து அவர் சரிந்த விழ மற்றவர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடுகின்றனர். இதில் குண்டு பாய்ந்து சரிந்த விழுந்த நபர் தான் முப்தி கைசர் பாரூக் என கூறப்படுகிறது. ஆனால் இந்த வீடியோ உண்மையானதா? இல்லை வேறு இடத்தில் நடந்த நிகழ்வை முப்தி கைசர் பாரூக் சுட்டு கொலை செய்யப்பட்டதாக பரப்பப்படுகிறதா? என்பதில் குழப்பம் உள்ளது. இதனை இன்னும் பாகிஸ்தான் உறுதி செய்யவில்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications