ஜாம்பியாவில் படகு கவிழ்ந்து விபத்து - மாணவர்கள் உட்பட 26 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

லுசாகா: ஜாம்பியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 மாணவர்கள் உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

தென் ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் 50வது சுதந்திர தினத்தைக் கொண்டாட சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளது. மற்றொரு பள்ளி விழாவில் கலந்து கொள்வதற்காக கரிபா நதியில் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஒரு படகில் சென்றுள்ளனர்.

26 dead in Zambia boat accident

நிர்ணயிக்கப் பட்டதை விட படகில் அதிக அளவில் ஆட்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆற்றின் நடுவே சென்று கொண்டிருந்த போது திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 23 மாணவர்கள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த மாணவர்கள் 6 முதல் 15 வயதுக்கு இடைப் பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது.

இந்தத் துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் கை ஸ்காட், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். மேலும், உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கிற்கான செலவை அரசே ஏற்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+