படகில் ஆஸி. புறப்பட்ட 26 தமிழர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பிய இந்திய கடற்படை
Subscribe to Oneindia Tamil
சிட்னி: சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா தப்பிச் செல்ல முயற்சித்த 26 இலங்கைத் தமிழர்களை இந்திய கடலோரக் காவல்படை தடுத்து நிறுத்தி மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பியுள்ளனர்.
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 26 இலங்கை தமிழர்களை நடுக்கடலில் தடுத்து நிறுத்தியது இந்திய கடலோரக் காவல்படை.
பிடிபட்ட அவர்களிடம் அந்தமான் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, பிடிபட்ட இலங்கைத் தமிழர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வேலை தேடிச் செல்வதாகவும், இதற்காக படகோட்டிக்கு பல லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் அவர்கள் கூறினர்.
இதையடுத்து, அந்த 26 இலங்கைத் தமிழர்களும் அந்தமானில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications