வயசு 62, என்னோட லவ்வர்.. எங்காச்சும் பார்த்தீங்களா.. வலை வீசி தேடும் 29 வயது சீன இளைஞர்!
பீஜிங்: இணையதளத்தில் சந்தித்த தனது 62 வயது காதலியை தேடி, வேலையை ராஜினாமா செய்து விட்டு ஊர் ஊராக அலைந்து வருகிறார் 29 வயது சீன இளைஞர் ஒருவர்.
முகம் பார்க்காமல் இணையதளத்தில் காதலிப்பவர்கள் உண்டு. அந்த வகையில், சீனாவைச் சேர்ந்த சூ ஜிங் என்ற இளைஞருக்கு, கடந்த ஓராண்டிற்கு முன் இணையதளம் மூலமாக 62 வயது பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது.

இருவருக்கும் இடையே பெரிய அளவில் வயது வித்தியாசம் இருந்தாலும் அதை பற்றியெல்லாம் யோசிக்காமல் அப்பெண்ணை தீவிரமாக காதலிக்க ஆரம்பித்தார் ஜிங்.
இந்நிலையில், சமீபத்தில் திடீரென ஜிங்கின் காதலி மாயமாகி விட்டாராம். எங்கு தேடியும் இன்னமும் அவர் கிடைக்கவில்லையாம்.
காதலியைத் தேடுவதற்காக தனது வேலையை ராஜிமானா செய்தார் ஜிங். பின்னர், காதலியைத் தேடி ஹீனான் மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான க்சியாங்டானுக்கு சென்றார். காதலியின் வீட்டையும் கண்டு பிடித்து விட்டார். ஆனால், அங்கு ஜிங்குக்கு அவமரியாதை தான் பரிசாக கிடைத்தது.
அப்பெண்ணின் மருமகன் வீட்டை விட்டு ஜிங்கை வெளியேற்றியதுடன், தனது மாமியார் பற்றி எந்த தகவலையும் கூற மறுத்துவிட்டார். இந்நிலையில் தனது தேடும் யுக்தியை மாற்றிய ஜிங், அப்பெண்ணின் முன்னாள் கணவரை தொடர்பு கொண்டார்.
அவரிடம் தனது காதலியை இருப்பிடம் ஏதும் தெரியுமா என்று ஜிங் கேட்டபோது, தங்களது விவாரத்து சான்றிதழை காண்பித்துள்ளார் அவர்.
தொடர்ந்து மனம் தளராத ஜிங், உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து விட்டு தனது காதலிக்காக காத்திருக்கிறார்.
தனது காதலி குறித்து ஜிங் கூறுகையில், ‘62 வயதை எட்டியவளாக இருந்தாலும் எனது காதலி 40 வயதுடையவள் போல் இருப்பாள். அவள் தான் என் முதல் பெண் தோழி. அவள் தான் என் முதல் காதலி. ஒவ்வொரு நாள் இரவும் பகலும் அவளை பற்றியே யோசிப்பேன்' என்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications