அமெரிக்காவில் கேவலம்! ஒரே வீட்டில் 3 பேர்.. மருத்துவமனை, வாடகை வீடு சலுகை.. வருகிறது புதிய சட்டம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பொதுவாக ஒரு குடும்பம் என்றால் கணவன், மனைவி என 2 பேர் இருப்பதுதான் நமக்கு தெரியும்.. ஆனால், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு நகரம், விநோதமான நடைமுறையை கொண்டுவந்துள்ளது.. ஆம், ஒருவர் 3 பேரை கூட கல்யாணம் பண்ணிக்கலாம்.. இதன் மூலம் அவர்களுக்கு என்னென்ன உரிமைகள் கிடைக்கும் தெரியுமா? அதை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்..!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வெஸ்ட் ஹாலிவுட் நகரத்தில்தான், இப்படியொரு புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தைக் கொண்டுவருவதில் வழக்கறிஞர் கிறிஸ்டினா ஃபியால்ஹோ முக்கியப் பங்காற்றியுள்ளார்.

Polyamory Law

சிலர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களைக் காதலிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் குடும்பமாகவும் வாழ்கிறார்கள். இப்படி பலர் இணைந்து காதல் உறவில் இருப்பதற்கு Polyamory என்று பெயர்.

இப்படி 3 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து வாழும் குடும்பத்துக்கும் சில உரிமைகள் வேண்டும் என்பதற்காகவே வெஸ்ட் ஹாலிவுட் நகரம் இந்தப் புதிய முடிவை எடுத்துள்ளது.

ஒருமனதாக ஒப்புதல்

இந்தப் புதிய திட்டத்தை நகர மேயர் ஜான் ஹெயில்மேன் அறிமுகப்படுத்தினார்.. இதையடுத்து நவம்பர் 2-ம் தேதி நடைபெற்ற நகர சபைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மொத்தம் 5 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்ததால் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இந்த நடைமுறை டிசம்பர் 2-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

இதன்படி, 3 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தங்களது உறவை நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம். வெஸ்ட் ஹாலிவுட் நகரத்தில் வசிப்பவர்கள் மட்டுமின்றி, வெளியூர்களில் வசிப்பவர்களும் இங்கு பதிவு செய்யலாம்.

யாருக்கெல்லாம் அனுமதி?

ஆனால், இவர்களுக்கு திருமண அங்கீகாரம் கிடையாது. சில அடிப்படை உரிமைகள் மட்டுமே கிடைக்கும்... இந்த உறவில் இருப்பவர்கள் அனைவருக்கும் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அனைவரும் தங்களது விருப்பத்துடனும் சம்மதத்துடனும் இந்த உறவில் இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் தேவைகளையும் நலன்களையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பையும் ஏற்க வேண்டும். மேலும், அவர்கள் நெருங்கிய ரத்த உறவினர்களாக இருக்கக் கூடாது.

பதிவு செய்யும்போது அனைவரும் அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். நேரில் வர முடியாதவர்கள் தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ஆனால், அதிலுள்ள கையெழுத்துகள் முறையாகச் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

என்னென்ன உரிமைகள்?

இப்படி பதிவு செய்துகொள்பவர்களுக்கு சில முக்கியமான உரிமைகள் கிடைக்கும். இவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், மற்றவர்களும் அவரை பார்க்கச் செல்லலாம். அதேபோல், சிறையில் இருக்கும் தங்களது துணையை சந்திக்கும் உரிமையும் கிடைக்கும்.

வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. உதாரணமாக, வாடகை ஒப்பந்தத்தில் பெயர் உள்ள ஒருவர் இறந்துவிட்டாலோ அல்லது வீட்டை விட்டுச் சென்றுவிட்டாலோ, மற்றவர்கள் தொடர்ந்து அந்த வீட்டில் வசிக்க முடியும். இதற்காக வீட்டு உரிமையாளர்கள் அவர்களை உடனடியாக வெளியேற்ற முடியாது.

திருமண அங்கீகாரம் கிடையாது

இங்கே ஒரு முக்கியமான விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும்... 3 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் திருமணம் செய்துகொள்ள இந்த சட்டம் அனுமதி வழங்கவில்லை. அதாவது, இவர்களுக்கு கணவன் - மனைவிக்கு கிடைக்கும் அனைத்து சட்ட உரிமைகளும் கிடைத்துவிடாது. நகராட்சி அளவில் உறவைப் பதிவு செய்து சில அடிப்படை உரிமைகளை பெறுவதற்கான ஏற்பாடுதான் இது.

ஏற்கனவே அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள சோமர்வில், கேம்பிரிட்ஜ் ஆகிய நகரங்களிலும் இதுபோன்ற பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது வெஸ்ட் ஹாலிவுட் நகரமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது..

ஆனால், அதே நேரத்தில் "கலிபோர்னியா ஃபேமிலி கவுன்சில்" போன்ற பழமைவாத அமைப்புகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இத்தகைய பல-நபர் கலாச்சாரம் சமூக பண்பாட்டைச் சீரழிக்கும் கேவலமான கொண்டிருக்கிறார்கள்.. இதனால் அமெரிக்க அரசியலில் இச்சம்பவம் பெரும் விவாதத்தை கிளப்பி விட்டுள்ளதாம்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+