நான் இங்குதான் புதைக்கப்பட்டேன்.. சிறுவன் கூறிய மேட்டர்.. தோண்டியபோது அதிர்ச்சி! மறுபிறவி இருக்கா?
டெல்அவிவ்: இஸ்ரேல் - சிரியா எல்லையில் உள்ள ஹோலன் குன்று பகுதியில் பிறந்த சிறுவன் தனது 3 வது வயதில் கடந்த பிறவியில் தான் கோடாரியால் தாக்கி கொலை செய்யப்பட்டதாக கூறி புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். அதனை தோண்டிப்பார்த்தபோது அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல், சிரியா ஆகியவை அண்டை நாடுகளாக உள்ளன. இதில் இஸ்ரேல், சிரியா ஆகிய நாடுகளுக்கு இடையே எல்லை பிரச்சனை உள்ளது. எல்லையில் உள்ள ஹோலன் குன்றுகள் யாருக்கு சொந்தம் என்பதில் இருநாடுகள் இடையே பஞ்சாயத்து உள்ளது.

தற்போது இந்த ஹோலன் குன்றின் ஒருபகுதி சிரியாவிடமும், இன்னொரு பகுதி இஸ்ரேல் வசமும் உள்ளது. இந்த பகுதியில் ட்ரூஸ் இனக்குழுவை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் ட்ரூஸ் இனக்குழுவில் ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் தலையில் நீண்ட, சிவப்பு நிற அடையாளம் ஒன்று இருந்தது. ட்ரூஸ் இனக்குழுவினரை பொறுத்தமட்டில் பிறக்கும் குழந்தையின் உடலில் ஏதேனும் அடையாளங்கள் இருப்பின் அந்த குழந்தை மறுபிறவி எடுத்து வந்துள்ளதாக நம்பப்படுகிறது. அந்த வகையில் தான் இந்த குழந்தையும் மறுபிறவி எடுத்து இருக்கலாம் என்று குடும்பத்தினர் நினைத்தனர்.
இதற்கிடையே தான் அந்த குழந்தை வளர்ந்து வந்தது. 3 வயது கடந்த நிலையில் குழந்தை நன்றாக பேச தொடங்கியது. அதன்பிறகு தனது முந்தைய கால பிறவி பற்றி கூற தொடங்கினார். அப்போது அந்த குழந்தை தனது முந்தைய பிறவி பற்றி அதிர்ச்சி தகவலை கூறியது. அதாவது முந்தைய பிறவியில் தான் கோடரியால் தலையில் தாக்கி கொலை செய்யப்பட்டதாக கூறினார். மேலும் புதைக்கப்பட்ட இடத்தையும் கூறினார்.
இதையடுத்து குடும்பத்தினர் அந்த இடத்தை சென்று தோண்டி பார்த்தனர். அப்போது எலும்பு கூடு மற்றும் கோடரி கைப்பற்றப்பட்டது. அதுமட்டுமின்றி தன்னை கொலை செய்த நபரையும் சிறுவன் அடையாளம் காட்டினார். அவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக சிறுவனின் முழு கதையும் ஜெர்மன் டாக்டரான ட்ரூட்ஸ் ஹார்டோ தனது புத்தகத்தில் கூறியுள்ளார். ட்ரூட்ஸ் ஹார்டோ "முன்னர் வாழ்ந்த குழந்தைகள்: இன்று மறுபிறவி எடுத்துள்ளனர்"(Children Who Have Lived Before: Reincarnation Today) என்று புத்தகம் எழுதியுள்ளார். அதில் இதுபற்றிய தகவலை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை இணையதளங்களில் படிக்கும் ஒருதரப்பினர் மறுபிறவி என்பது உண்மை தான் என்று கூறிவருகின்றனர். அதேவேளையில் இன்னொரு தரப்பினரோ, ‛‛இது எதிர்பாராத வகையில் நடந்தது. மறுபிறவி என்று ஒன்று இல்லவே இல்லை'' என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் மறுபிறவி என்பது இன்னும் அறிவியல்பூர்வமாக இன்று வரை நிரூபிக்கப்படவில்லை. கதைகள் மூலமாக தான் மறுபிறவி என்பது உண்டு என்று பலரும் கூறி வருகின்றனர். இதனை பலரும் நம்பி வருகிறார்கள்.
இருப்பினும் நாம் ஒன்றை மறந்துவிடக்கூடாது. மறுபிறவி விவகாரத்தில் இஸ்ரேல் - சிரியா எல்லையில் ஹோலன் குன்று பகுதியை சேர்ந்த இந்த சிறுவன் மேட்டர் மட்டும் இல்லை. இன்னும் சில இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. ஏன் நம் நாட்டில் கூட இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. 1926ல் டெல்லியில் சாந்தி தேவி என்ற பெண்குழந்தை பிறந்தது. 1930ல் சாந்தி தேவி என்ற 4 வயது சிறுமி தனது முன்னாள் கணவரின் பெயரையும், வசித்த வீடு பற்றியும் கூறினார்.முந்தைய ஜென்மத்தில் உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் பிறந்தேன். கேதர்நாத் என்பவரை திருமணம் செய்தேன். குழந்தை பிறந்ததும் இறந்துவிட்டேன் என்று தனது மரணம் பற்றிய விபரங்களையும் தெரிந்திருந்தார்.
இதையடுத்து குடும்பத்தினர் அந்த கிராமத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது சிறுமி கூறியது அனைத்தும் சரியானதாக இருந்தது. இதனால் சாந்தி தேவி மறுபிறவி எடுத்ததாக நம்பப்பட்டது. இந்த விவகாரம் அப்போது மகாத்மா காந்தியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டன. இந்த விசாரைண கமிஷன் முன்பு பல்வேறு நபர்களை சாந்தி தேவி என்ற சிறுமி அடையாளம் காட்டினார். இதையடுத்து இருகமிஷன்களும் சாந்தி தேவி மறுபிறவி எடுத்ததாக அறிக்கை வழங்கினர்.
அதேபோல் அமெரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ் லீனிங்கர் என்ற சிறுவன் 2ம் உலகப்போர் தொடர்பாக சில விஷயங்களை தெரிவித்தார். விமானம் தாங்கிக் கப்பலின் பெயர், படைப்பிரிவு மற்றும் சக வீரர்களின் பெயர்கள் உட்பட விமானங்களின் சிறப்புகள் பற்றி கூறினார். இதனை வரலாற்று ஆவணங்களை வைத்து பார்த்தபோது அனைத்தும் சரி என்பது தெரியவந்தது. அதோடு தங்கள் மகன் ‛ஜேம்ஸ் ஹஸ்டன்' என்ற பெயரில் போர் விமானியாக இருந்ததாக கூறினர். இப்படியான சூழலில் தான் தற்போது இஸ்ரேல் - சிரியா எல்லையில் உள்ள சிறுவன் கூறிய விவகாரமும் கவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications