முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட 30 பேர் பதவிக்கு வேட்டு? மாறப்போகும் இலங்கை பொதுத் தேர்தல் களம்
கொழும்பு: இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகள் உட்படப் பல போட்டியிட வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கிட்டத்தட்ட 5,634,915 வாக்குகளைப் பெற்று அநுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசா மற்றும் ரணில் விக்கிரமசிங்க தோல்வியைத் தழுவினர். அநுரகுமாரவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. ஏகேடியின் ஜெவிபி சுமார் 42.31% வாக்குகளைப் பெற்றுள்ளது. அதேபோல் சஜித்தின் எஸ்ஜேபி 32.76% வாக்குகளையும் ரணில் 17.27% வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்டு ஏகேடி கொண்டுவருவார் என மக்கள் நம்பி இந்த வெற்றியை அவருக்கு வழங்கியுள்ளனர். ஜெவிபி மக்களிடம் பல வாக்குகளை அளித்துள்ளது. குறிப்பாக விலைவாசி ஏற்றத்தைத் தடுத்து நிறுத்துவோம் என்றும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும் வரிச் சுமையிலிருந்து மக்களை மீட்போம் என்றும் பல வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளது. அதை எல்லாம் உடனடியாக அமல்படுத்துவார் என மக்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அதற்கான அறிகுறிகள் இலங்கையில் தென்படத் தொடங்கியுள்ளன. இதுவரை ஒரு முட்டையின் விலை 55 ரூபாய் இருந்தது. இப்போது அதன் விலை அப்படியே பாதி குறைந்து 25 ரூபாய்க்கு விற்பனையாகியது. அது பொது மக்கள் மத்தியில் பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நேற்று மீண்டும் அதன் விலை 33 ரூபாய் அளவுக்கு ஏறியது.
அதற்கான காரணம் என்ன என்று உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர். கோழி முட்டைகளின் தேவை அதிகம் உள்ளபோது அதற்காக உற்பத்தி குறைவாக உள்ளது என்கிறனர். மேலும் தீவனத்தின் விலைவாசி குறையாததும் ஒரு காரணம் என்கிறனர். எப்படிப் பார்த்தாலும் கடந்த ஆட்சிக் காலத்தைவிட முட்டை விலை குறைந்துள்ளது என்பது முக்கியம். ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கின்றது.
இந்தத் தேர்தல் இப்போது பதவியில் உள்ள பலரது பதவியைப் பறித்துவிடும் என்று ஒரு வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது. எப்படியும் நடைபெற உள்ள தேர்தலில் கிட்டத்தட்ட புதிய முகங்கள் சுமார் 20 பேர் வெற்றி பெற்று உள்ளே செல்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த மாற்றம் ஏகேடி ஜனாதிபதியாக வந்ததன் மூலம் நடைபெறும் என்கிறார்கள் இலங்கை அரசியல் வியூக கணிப்பாளர்கள்.

இப்போது பதவியில் இருப்பவர்கள் மற்றும் முன்பு ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர்கள் என சுமார் 30 பேர் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாகச் சொன்னால், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சே, முன்னாள் சபாநாயகர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலர் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சிங்கள அரசியல்வாதிகளைப் போலவே தமிழ் பகுதியில் கூட சிலர் இந்த முறை போட்டியிலிருந்து விலக உள்ளனர்.
இப்போதைக்கு 30 பேர் இந்த முடிவில் உள்ளனர். இந்த எண்ணிக்கை வேட்புமனு தாக்கல் செய்யும் தருணத்தில் 100 ஆகக் கூட உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு நிலை உருவானால் அநுரகுமார கட்சியின் செல்வாக்கு இலங்கையில் கூடும். ஆளும் கட்சியான ஜெவிபி இலங்கை அரசியல் களத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்கிறனர்.

இந்தப் பின்வாங்கலுக்குக் காரணம், மக்கள் மத்தியில் மற்ற கட்சிகளின் செல்வாக்கு குறைந்துள்ளதுதான். தேவையில்லாமல் போட்டியிட்டு டெபாசிட் இழக்க வேண்டாம் என்ற அச்சம் எதிர்க்கட்சிகள் மத்தியில் நிலவுகிறது. அதை எல்லாம் கணக்குப்போட்டுத்தான் இந்த முடிவை முன்னாள் ஜனாதிபதிகள் சிலர் எடுத்துள்ளனர். குறிப்பாக மகிந்த ராஜபக்சே குடும்பம் வரும் காலங்களில் ஒட்டுமொத்தமாக நாடாளுமன்ற அதிகாரத்தை இழக்கலாம். அவரது விலகல் கூடவே அவரது குடும்ப உறுப்பினர்களையும் தேர்தலில் நிற்கவிடாமல் செய்யும் என்று சொல்லப்படுகிறது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications