கனடா உள்ளாட்சித் தேர்தல் களத்தில் 30 தமிழர்கள்.. ராதிகா வரிசையில் சேருவாரா கிரிசாந்தி?
டோரன்டோ: கனாடவில் உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 30க்கும் மேற்பட்ட தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.
டோரன்டோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழர்கள் பலர் வேட்பாளர்களாக களம் கண்டுள்ளனர். இதனால் இந்தப் பகுதிகளில் தேர்தல் களை கட்டியுள்ளது.
டோரண்டோவில் தமிழர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்களிடம் தமிழ் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

கட்சி பாகுபாடு கிடையாது
நம்மூரைப் போலவே கனடாவிலும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சி முக்கியமாக இருக்காது. மாறாக, வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கு, அவர்களின் செயல்திறன், சாதனைகள் ஆகியவையே முக்கியமாக பார்க்கப்படும்.

3 பதவிகளுக்கு
இந்தத் தேர்தலானது கல்விச்சபை உறுப்பினர், நகரசபை உறுப்பினர், நகர மேயர் ஆகியப பதவிகளுக்கான தேர்தலாகும்.

போட்டி
ஒரே பதவிக்கு சில இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் வேட்பாளர்கள் போட்டியில் உள்ளதால் அங்கு போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.

வெற்றி வாய்ப்பு
தற்போதைய நிலையில் 5 இடங்களில் தமிழர்கள் வென்றால் அது பெரும் சாதனையாக கருதப்படும். அதேசமயம், 3 அல்லது 4 இடங்களில் வென்றாலும் கூட சிறப்பானதே என்று அங்குள்ள தமிழர்கள் கூறுகிறார்கள்.

30க்கும் மேற்பட்டோர்
இந்தத் தேர்தலில் 30க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களததில் உள்ளனராம்.இவர்கள் தீவிரப் பிரசாரத்திலும் குதித்துள்ளனர்.

கிரிசாந்தி
2003-2006ல்
2003, 2006ல் நடந்த தேர்தலில் போட்டியிட்டதை விட தற்போது அதிக அளவிலான தமிழர்கள் போட்டிக் களத்தில் உள்ளனர்.

முதல் தமிழ் வெற்றி
கனடா உள்ளாட்சித் தேர்தலில் வென்ற முதல் தமிழர் என்ற பெருமை லோகன் கணபதி என்பவரையே சாரும். இவர் 2006ல் வெற்றி பெற்றார்.

முதல் தமிழ் எம்.பி ராதிகா
அதேபோல கனடா நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழர் என்ற பெருமை கொண்டவர் ராதிகா சித்சபேசன் ஆவார். இவரது வெற்றிக்குப் பிறகுதான் தமிழர்கள் அங்கு உத்வேகம் பெற்றனர்.

கிரிசாந்தி
தற்போதைய தேர்தலில் கிரிசாந்தி சரோஜ்குமாரன் உள்ளிட்ட பல முக்கிய வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications