ஜப்பானில் அடுத்த ஷாக்.. தீப்பற்றி எரிந்த பயணிகள் விமானம்! நல்வாய்ப்பாக 379 பணிகள் உயிர் தப்பினர்
டோக்கியோ: ஜப்பானில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும்போது தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 379 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர். ஆனால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜப்பான் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று சற்று நேரத்திற்கு முன்பு டோக்கியோவின் விமான நிலையத்தில் தரையிறங்கியிருக்கிறது. ஆனால் இறங்கிய சில நொடிகளில் பயங்கரமாக தீப்பிடித்துள்ளது. தரையிறங்கும்போது மற்ற விமானத்துடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஜேஏஎல் 516 என்ற விமானம் ஹொக்கைடோவில் இருந்து 379 பயணிகளுடன் புறப்பட்டிருக்கிறது. இது டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்தில் சிக்கியுள்ளது. அதாவது இந்த விமானம் தரையிறங்கும் ஓடுபாதையில் அந்நாட்டின் கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று குறுக்கே நிறுத்தப்பட்டிருந்திருக்கிறது. எனவே இதில் மோதி இரண்டு விமானங்களும் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்திருக்கின்றன.

இதில் பயணிகள் விமானத்திலிருந்த 379 பேரும் பத்திரமாக விமானத்திலிருந்து மீட்கப்பட்டிருந்திருக்கின்றனர். ஆனால், கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக விமானத்திலிருந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விமானத்தில் மொத்தம் 6 பேர் வரை இருந்துள்ளனர். தற்போது ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications