Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீரென குலுங்கிய விமானம்.. நடுவானில் தூக்கி வீசப்பட்டதால் தொங்கிய பயணி.. உயிர் தப்பியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

மொண்டெவீடியோ: நடுவானில் பறந்துக்கொண்டிருந்த விமானம் ஒன்று திடீரென்று பயங்கரமாக குலுங்கியதில் 38 பயணிகள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக ஷேராகி வருகிறது.

மனித கண்டுபிடிப்புகளில் விமானம் என்பது சிறப்பானதொரு கண்டுபிடிப்பாக இருக்கிறது. இன்றையிலிருந்து சுமார் 120 வருடங்களுக்கு முன்னர் முதன் முறையாக விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்போது தொடங்கி இப்போது வரை விமானங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. இருப்பினும் டர்புலன்ஸ் எனப்படும் குலுங்கலை சமாளிக்கும் திறன் கொண்ட விமானங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

Flight Turbulence Brazil

நடுவானில் விமானம் பறக்கும்போது டர்புலன்ஸ் ஏற்படுவது இயல்பானதுதான். அடிக்கடி விமானத்தில் பயணிப்பவர்கள் நிச்சயம் ஒரு முறையாவது, டர்புலன்ஸை அனுபவித்திருப்பார்கள். அந்த வகையில், சமீபத்தில் ஏர் யூரோபாவுக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று கடுமையான டர்புலன்ஸில் தற்பொது சிக்கியுள்ளது.

ஸ்பெயினில் உள்ள மாட்ரிட்டில் இருந்து உருகுவேயின் மான்டிவீடியோவுக்கு ஏர் யூரோபா போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானம் 325 பயணிகளுடன் புறப்பட்டது. இந்த விமானம் வடக்கு பிரேசிலுக்கு அருகில் சென்றுக்கொண்டிருந்தபோதுதான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது, டர்புலன்ஸ் ஏற்படப்போவதை ஏற்கெனவே விமானி உணர்ந்திருக்கிறார். எனவே, அனைவரும் சீட் பெல்ட்டை அணிந்துக்கொள்ள வேண்டும் என்று பயணிகளுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார்.

Flight Turbulence Brazil

இருப்பினும் சிலர் சீட் பெல்ட்டை அணியவில்லை. இதனால், டர்புலன்ஸால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஒரு பயணி லக்கேஜ் வைக்கும் பகுதிக்கு தூக்கியடிக்கப்பட்டார். அவர் அங்கு தொங்கியபடி கிடந்தார். பின்னர் சக பயணிகள் அவரை பத்திரமாக மீட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக ஷேராகி வருகிறது. இந்த டர்புலன்ஸில் மொத்தமாக 38 பயணிகள் காயமடைந்துள்ளனர். நிலைமை சரியில்லாததை உணர்ந்த விமானி உடனடியாக வடகிழக்கு பிரேசிலில் உள்ள நடால் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த ஏர் யூரோபா, "டர்புலன்ஸால் பாதிக்கப்பட்ட விமானம் பத்திரமாக தரையிறங்கியிருக்கிறது. காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சையளிக்கப்பட்டிருக்கிறது. பயணிகளை சொந்த ஊருக்கு அனுப்ப வேறு ஒரு விமானத்தையும் ஏற்பாடு செய்திருக்கிறோம்." என்று கூறியிருக்கிறது.

டர்புலன்ஸ் என்பது அசாதாரணமானது. இதனால் பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது. ஆனால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவில் நடுவானில் இதேபோல விமானம் குலுங்கியதில் ஒருவர் உயிரிழந்தார். விமானம் வெற்றிடத்தை கடக்கும்போது அது தானாக கீழிறங்க நேரிடும். இது டர்புலன்ஸ்க்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இது தவிர, குளிர்காற்றின் தாக்கம், அதிக வெப்ப காற்று ஆகியவையும் டர்புலன்ஸ்க்கு காரணமாக சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+