நேபாளத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டரில் 4.7 அலகாக பதிவு

Subscribe to Oneindia Tamil

காத்மண்டு: நேபாள நாட்டின் திபெத் எல்லைப் பகுதியில் நேற்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 4.7 ஆக இது பதிவாகி உள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

தலைநகர் காத்மண்டுவில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிந்துபால்சோக் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை 6 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என்று காத்மண்டு நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.7 ஆக பதிவாகியுள்ளது.

4.7 magnitude earthquake hits off nepal

நேபாளத்தில், இந்த நிலநடுக்கத்தால், உயிர்களுக்கு பாதிப்பு இல்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இம்மாத தொடக்கத்தில் ஓக்கல்துங்கா மாவட்டத்தில் மையமாக கொண்டு 4.1 அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுத்தை அடுத்து, இதுவரை சுமார் 442 முறை ரிக்டர் அலகில் 4-க்கும் அதிகமாக உணரப்பட்டுள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+