நேபாளத்தில் 22 மணிநேரம் இடிபாடுகளில் சிக்கியிருந்த 4 மாத குழந்தை உயிருடன் மீட்பு
காத்மாண்டு: நேபாளத்தில் இடிபாடுகளில் சிக்கியிருந்த 4 மாத குழந்தையை மீட்பு பணியினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
நேபாளத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு 22 மணிநேரங்கள் கழித்து பக்தபூர் நகரில் இடிபாடுகளுக்கு இடையே இருந்து 4 மாத ஆண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது என்று காத்மாண்டு டுடே நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மீட்பு பணியினர் பக்தபூரில் இடிபாடுகளை அகற்றியபோது ஒரு இடத்தில் இருந்து குழந்தை அழும் சப்தம் மெதுவாக கேட்டுள்ளது. சப்தம் வந்த இடத்தில் இடிபாடுகளை அகற்றியபோது அங்கு 4 மாத குழந்தை இருந்ததை கண்டுபிடித்து மீட்டனர்.
சோனித் அவால் என்ற அந்த குழந்தை காயம் எதுவும் இன்றி நல்ல நிலைமையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காத்மாண்டுவில் இடிபாடுகளுக்கு இடையே 50 நேரமாக இருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டார்.
இதையடுத்து 80 மணிநேரமாக இடுபாடுகளில் சிக்கித் தவித்த வாலிபர் ஒருவரும் பத்திரமாக மீட்கப்பட்டார். நேபாளத்தில் இடிபாடுகளில் இன்னும் ஏராளமானோர் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications