நைஜீரியா: போகோ ஹரம் கடத்திய 300 மாணவிகளில் மேலும் 4 பேர் தப்பினர்
டமாடுரு: நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளில் மேலும் நான்கு பேர் தப்பி வந்துள்ளதாக அந்நாட்டு கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.
வடக்கு நைஜீரியாவை இஸ்லாமியர்களுக்கான தனி நாடாக அறிவிக்கக்கோரி போகோஹாரம் தீவிரவாதிகள் நீண்ட நாட்களாகவே போராடி வருகின்றனர். சமீபத்தில் 300 மாணவிகளைக் கடத்திய தீவிரவாதிகள் அவர்களை பாலியல் அடிமைகளாக விற்கப் போவதாக மிரட்டல் விடுத்தனர். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து சுமார் 53 மாணவிகள் சாமர்த்தியமாக தப்பித்து வந்தனர்.

ஆனபோதும், மீதமுள்ளவர்களை விடுவிக்க சிறையில் உள்ள அவர்களது இயக்கத்தைச் சேர்ந்தவர்களை விடுதலைச் செய்ய வேண்டுமென போகோ ஹரம் நிபந்தனை விதித்தது. ஆனால், அதற்கு நைஜீரிய அரசு உடன்படவில்லை.
அம்மாணவிகளை மீட்கும் முயற்சியில் நைஜீரிய அரசு அண்டை நாடுகளின் உதவியோடு ஈடுபட்டு வருகிறது. மாணவிகள் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து விட்டதாகவும், மாணவிகளை உயிருடன் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நைஜீரிய ராணுவம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே நைஜீரியாவின் பல பகுதிகளில் போகோ ஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை ஆயிரக்கணக்காணோர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது தீவிரவாதிகள் பிடியில் இருந்து மேலும் நான்கு மாணவிகள் தப்பி வந்துள்ளதாக அந்நாட்டு கல்வி ஆணையர் மூஸா ஐனுவா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். ஆனால், அம்மாணவிகள் எவ்வாறு தப்பி வந்தனர் என்பது குறித்து தெளிவான தகவல்களை வெளியிட அவர் மறுத்து விட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications