நடுவானில் பயங்கரமாக மோதிய 2 விமானங்கள்.. விமானத்தில் பயணித்த 4 பைலட்டுகளும் பலி
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் நடுவானில் பறந்து கொண்டிருந்த 2 விமானங்கள் திடீரென்று மோதிக்கொண்டதில் அந்த விமானங்களில் பயணித்த 4 பைலட்டுகளும் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து எப்படி நேர்ந்தது? என்பது தொடர்பான திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிலிப்பைன்ஸ் நாட்டின் படாங்கஸ் மாகாணத்தில் பெர்ணாண்டோ என்ற விமான தளம் உள்ளது. இந்த விமான தளத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டின் விமானப்படை பைலட்டுகள் பயிற்சி எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் எஸ்எஃப் 260 ரக விமானங்களில் பைலட்டுகள் பயிற்சி மேற்காண்டனர். அப்போது அருகருகே பறந்த 2 விமானங்கள் எதிர்பாராதவிதமாக வானில் மோதிக்கொண்டன.
இதில் 2 விமானங்களும் தீப்பற்றி எரிந்தது. மோதிய வேகத்தில் தீப்பற்றிய விமானங்கள் அப்படியே தரையில் விழுந்து நொறுங்கின. இதில் விமானத்தில் பயணித்த 4 பைலட்டுகளும் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
இதுபற்றி விமானப்படை அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையே தான் வானில் 2 விமானங்களும் மோதி தீப்பிடித்து தரையில் விழுவது தொடர்பான வீடியோ வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
🇵🇭 Insane footage of two Philippine Air Force training planes colliding midair over Lipa City yesterday, with local reports indicating fatalities are probable. The SF-260 Marchetti aircraft collided during a training exercise near Fernando Air Base in Batangas province.Four military personnel were aboard the two planes. Writer: Mhedi https://t.co/lRIIpIxtUy
— Mario Nawfal (@MarioNawfal) October 24, 2026
இதனை பிலிப்பைன்ஸ் நாட்டின் செய்தி தொடர்பாளர் கர்னல் ஆல்வின் கின்குயியன் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''2 விமானங்களும் விமான தளத்தின் எல்லைக்குட்பட்ட வானில் பறந்தபோது மோதி விபத்தில் சிக்கின. துரதிர்ஷ்டவசமாக 4 பைலட்டுகள் இறந்துள்ளனர். வேறு எந்த உயிரிழப்புகளும் அதிர்ஷ்டவசமாக ஏற்படவில்லை'' என கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி வேறு எந்த விபத்துகளும் ஏற்படக்கூடாது என்பதற்காக எஸ்எஃப் 260 ரக விமானங்களை பயன்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த விமானங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவது தான்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் விமானப்படையில் சமீபகாலமாக விபத்துகள் அதிகரித்து வருகின்றன. கடந்த மே மாதம் எஸ்எஃப் 260 ரக பயிற்சி விமானம் மலைப்பகுதியில் விபத்தில் சிக்கியதில் 2 பைலட்டுகள் இறந்தனர். அதற்கு முன்பாக 2023ம் ஆண்டில் எஸ்எஃப் 260 ரக பயிற்சி விமானம் விபத்தில் சிக்கி 2 பைலட்டுகள் பலியாகினர். இந்நிலையில் தான் தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டு 4 விமானிகள் பலியாகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications
