Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தானில் பதவி இழந்த இம்ரான்கான்.. 43 சதவீத மக்கள் அதிருப்தியாம்! வெளியானது சர்வே முடிவு

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இம்ரான்கான் ஆட்சியை இழந்ததற்கு 43 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளதாக சர்வே முடிவு ஒன்று வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இந்நிலையில் திடீரென்று சொந்த கட்சியின் எம்பிக்கள், கூட்டணி கட்சியினர் இம்ரான்கானுக்கு எதிராக செயல்பட துவங்கினர்.

இம்ரான்கானுக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதனால் இம்ரான் கான் பெரும்பான்மையை இழந்தார். அவர் மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.

பதவி இழந்த இம்ரான்கான்

பதவி இழந்த இம்ரான்கான்

இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற இருந்தது. ஆனால் இம்ரான்கான் தந்திரமாக செயல்பட்டு வாக்கெடுப்பை நடத்த விடாமல் துணை சபாநாயகர் மூலம் தடுத்தார். மேலும் அதிபர் உதவியுடன் நாடாளுமன்றத்தை கலைத்தார். இதை எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர்கள் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தை நாடினர். இந்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஓட்டெடுப்பு நடந்தது. இதில் இம்ரான்கான் தோல்வியடைந்தார்.இதன்மூலம் அவர் பிரதமர் பதவியை இழந்தார்.

புதிய பிரதமர்

புதிய பிரதமர்

இதையடுத்து எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தன. புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( பிஎம்எல்-என்) கட்சியின் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் தம்பியாவார்.
இந்நிலையில் தான் இம்ரான்கான் ஆட்சி குறித்தும், அவர் பிரதமர் பதவியை இழந்தது பற்றியும் ‛Gallup pakistan' எனும் சர்வே மேற்கொள்ளப்பட்டது.

சரிதான் என 57 சதவீதம் பேர்

சரிதான் என 57 சதவீதம் பேர்

இந்த சர்வே பாகிஸ்தானில் உள்ள 100 மாவட்டங்களில் 1000 ஆண்கள், பெண்களிடம் எடுக்கப்பட்டது. இந்த சர்வே முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி இம்ரான் கான் ஆட்சியை இழந்ததது சரிதான் என 57 சதவீதம் பேர் கூறியுள்ளனர். உண்மையில் பொருளாதார தேக்கநிலையை சரிசெய்வதில் இம்ரான்கான் தோல்வியடைந்துவிட்டார். இதனால் அவர் பிரதமர் பதவியை விட்டு செல்வது நல்லது தான். இல்லாவிட்டால் நாடு இக்கட்டான சூழலை சந்திக்கும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 43 சதவீதம் பேர் அதிருப்தி

43 சதவீதம் பேர் அதிருப்தி

மாறாக 43 சதவீதம் பேர் இம்ரான்கான் ஆட்சியை இழந்ததற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். இம்ரான்கான் நேர்மையான முறையில் தான் ஆட்சியை செய்து வந்தார். பிரதமர் பதவியை அவர் இழந்தது வருத்தமாக உள்ளது. பொருளாதார தேக்கநிலை இருந்தாலும் கூட இம்ரான்கான் ஊழல், முறைகேடு செய்யாமல் ஆட்சியை மேற்கொண்டு வந்தார் என தெரிவித்துள்ளதாக அந்த சர்வே முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+