நள்ளிரவில் குலுங்கிய சீனா.. சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. 8 பேர் பலி.. பீதியில் உறைந்த மக்கள்
பீஜிங்: சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். நிலநடுக்க பாதிப்புகளால் 8 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவில் சக்தி வாய்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி நள்ளிரவு 11.59 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. சீனாவின் கன்சு மாகாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்ட்டது. நிலநடுக்கத்தின் தீவிரம் அதிகமாக இருந்ததால் பல க்ட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதனால், அச்சத்தில் உறைந்த மக்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக ஓடி வந்து வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

வீடுகளில் இருந்து மேற்பகுதி இடிந்து விழும் காட்சிகளும் வீட்டில் உள்ள பொருட்கள் குலுங்கும் காட்சிகள் அடங்கிய வீடியொ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். கன்சு மாகாணத்தின் சில பகுதிகள் மட்டும் இன்றி அருகில் உள்ள கிங்காய் மாகாணத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு மீட்பு பணிகளில் ஈடுபட உடனடியாக அவசர மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். சீனாவில் இதுபோன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவின் கிழக்கு பகுதிகளில் ரிக்டர் அளவில் 5.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 23 பேர் காயம் அடைந்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications