இஸ்ரேல்- ஈரான் மோதல்..கோதாவில் இறங்கிய அமெரிக்கா..அடுத்து என்ன நடக்கும்? சாத்தியமான 5 விஷயங்கள்
தெஹ்ரான்: இஸ்ரேல், ஈரான் இடையே 10-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் கோதாவில் இறங்கியுள்ளதால், சர்வதேச அளவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பதற்றமான சூழலில் அடுத்து என்ன நடப்பதற்கான வாய்ப்புள்ளது என்பதற்கான 5 விஷயங்களை பார்க்கலாம்.
ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ஈரானுக்கு அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தது. அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும். ஈரான் சரண் அடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார்.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
ஆனால் டிரம்பின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி தெரிவித்தார். இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக தகவல் வெளியானது. மேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக டிரம்ப் 2 வாரத்தில் முடிவு செய்வார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை ஈரானின் 3 முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுகளை வீசி அமெரிக்கா அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளது.
போர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய நகரங்களில் உள்ள அணு நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், போரின் தீவிரம் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவும் நிலையில், அடுத்து என்ன மாதிரியான சூழல்கள் நடக்கும் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
பதிலடி கொடுக்கும்?
* ஈரான் தனது மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தக்கூடும்.
* பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு அமெரிக்க குடிமகனும் அல்லது ராணுவ வீரரும் இலக்குதான்" என்று ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
* ஈரான் எச்சரிக்கையை தொடந்து நியூயார்க் நகர காவல்துறை, வாஷிங்டன் மற்றும் நியூயார்க்கில் உள்ள மத, கலாச்சார மற்றும் தூதரக தளங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
* இஸ்ரேல் தனது படைகளை தயார் நிலையில் வைத்து, ஈரான் ராணுவத்தின் முதுகெலும்பாக இருக்கும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மீது முன்கூட்டியே தாக்குதல் நடத்தக்கூடும்.
மறைமுக கூட்டாளிகள் மூலமாக
* இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கல்வி, கூட்டமாக கூடும் இடங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய துறைகள் மட்டும் செயல்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* லெபனான், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள தனது மறைமுக கூட்டாளிகள் மூலமாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்கக் கூடும்.
* ஹமாஸ், ஏமனில் உள்ள ஹவுத்திகள், ஈராக்கில் உள்ள Shiite போராளிகள், காசாவில் உள்ள ஹமாஸ் போன்ற படைகளை பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் செல்வாக்கை எதிர்க்கவும், நேரடி மோதலைத் தவிர்க்கவும் ஈரான் திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த அமைப்புகளும் தற்போது முன்பு போல் இன்றி பலவீனமாகவே உள்ளதாக சொல்லப்படுகிறது.
எச்சரித்த ரஷ்யா
* சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் சர்வதேச அளவில் கணிசமான செல்வாக்கைக் கொண்டுள்ளன. அவை ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலைக் கட்டுப்படுத்த அழைப்பு விடுக்கலாம். ஆனால் அதே நேரத்தில் ஈரானுக்கு அமைதியாக ஆதரவளிக்கலாம். முன்னதாக டிரம்ப் இஸ்ரேல்-ஈரான் மோதலில் " எரியும் தீயை எண்ணயை ஊற்றுவதாக" சீனா குற்றம் சாட்டியிருந்தது. மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங் அனைத்து தரப்பினரையும் குறிப்பாக இஸ்ரேலை "விரோதப் போக்கை நிறுத்த" வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்
* அதேபோல், இஸ்ரேல்-ஈரான் போரில் அமெரிக்கா "ராணுவ ரீதியாக தலையிட வேண்டாம்" என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. மேலும், ஈரான் அணுமின் நிலையமான புஷேர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் "செர்னோபில் போன்ற பேரழிவு" ஏற்படக்கூடும் என்று ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனத்தின் தலைவர் எச்சரித்தார்.
எண்ணெய் விலை உயரக் கூடும்
* முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடாக விளங்கும் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக உலகளாவிய எண்ணெய் விலை உயரக்கூடும். ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை மூட வாய்ப்பு உள்ளது. இந்த ஜலசந்தி வழியாக ஒரு நாளைக்கு 20 மில்லியன் பேரல் எண்ணெய் செல்கிறது. சவுதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு குழாய் வழியாக ஒரு நாளைக்கு 6 மில்லியன் பேரல் எண்ணெய் கொண்டு செல்ல முடியும்.
* மேலும், ஹார்முஸ் ஜலசந்தியைத் தவிர்த்து ஓமன் வளைகுடாவில் உள்ள புஜைரா துறைமுகத்திற்கு செல்லும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் குழாய் மூலமும் எண்ணெய் விநியோகம் செய்ய முடியும். இருப்பினும், அதிக போக்குவரத்து செலவுகள் காரணமாக விலைவாசி உயரும் என்று கூறப்படுகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலின் தீவிரத்தை பொறுத்து இந்த சூழ்நிலைகள் மாற வாய்ப்பு உள்ளது.
-
F-18 போர் விமானத்தை வெற்றிகரமாக தாக்கினோம்.. வீடியோ வெளியிட்ட ஈரான்.. அமெரிக்கா சொல்வது என்ன? -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications