500 பேர் பலி- உலகை உலுக்கிய இஸ்ரேல் பயங்கர தாக்குதல்-ஜோ பிடன் சந்திப்பை ரத்து செய்த பாலஸ்தீன அதிபர்!
ஜெருசலேம்: உலகை உலுக்கும் வகையில் இஸ்ரேல் நடத்திய காஸாவின் Al-Ahli Baptist Hospital மீதான அதிபயங்கர விமானப் படை தாக்குதலில் ஒரே இரவில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அமெரிக்கா அதிபர் ஜோ பிடனுனான சந்திப்பை பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இஸ்ரேல்- ஹமாஸ் ஜிஹாதிகள் இடையேயான 11-வது நாள் யுத்தம் உலகை பெரும் அச்சமும் அதிர்ச்சியும் அடைய வைத்துள்ளது. காஸா பகுதியில் ஆயிரக்கணக்கானோர் தஞ்சமடைந்திருந்த மருத்துவமனை (Al-Ahli Baptist Hospital ) மீது சரமாரியாக் இஸ்ரேல் விமானப் படை குண்டுகளை வீசியது. இஸ்ரேல் வீசிய குண்டுமழையால் அந்த பிராந்தியமே பேரதிர்வுக்குள்ளானது.

இத்தாக்குதலில் ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவம் உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தாக்குதலுக்குள்ளான மருத்துவமனையில் ஆயிரக்கணக்கானோர் தஞ்சமடைந்திருந்த நிலையில் இஸ்ரேல் இத்தாக்குதலை நடத்தியது. தொடக்கத்தில் 200 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இஸ்ரேலின் உக்கிர தாக்குதலின் கோரமாக 500க்கும் அதிகமானோர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.
இஸ்ரேலின் இந்த அதிபயங்கர தாக்குதலுக்கு பாலஸ்தீனம், எகிப்து உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் இக்கொடூர தாக்குதலைக் கண்டித்து பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் கண்டனப் போராட்டங்கள் வெடித்துள்ளன.
மேலும் இஸ்ரேல் தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லபட்ட சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீன அரசு 3 நாட்கள் துக்க தினம் கடைபிடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதல் அப்பட்டமான இனப்படுகொலை என பாலஸ்தீன அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் ஜிஹாதிகளும் இது இனப்படுகொலை என குற்றம்சாட்டி உள்ளன.
இஸ்ரேல் இந்த இனப்படுகொலையை உடனடியாக நிறுத்த வேண்டும்; பொதுமக்கள் குடியிருப்புகளை இலக்கு வைக்கும் இந்த தாக்குதல்களை கைவிட வேண்டும் என துருக்கியும் வலியுறுத்தி உள்ளது. இஸ்ரேலின் இத்தாக்குதலை ஜோர்டானும் கடுமையாக கண்டித்துள்ளது.
மருத்துவமனை மீதான இஸ்ரேலின் அதிபயங்கர தாக்குதலை ஐநாவின் உலக சுகாதார அமைப்பும் கண்டித்துள்ளது. இப்படியான ஒரு தாக்குதலுக்குப் பின்னரும் உலகம் அமைதியாக் இருப்பது கொடூரமானது என லெபனான் வேதனை தெரிவித்துள்ளது.
அத்துடன் இஸ்ரேல், பாலஸ்தீனத்துக்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் (ஜோ பிடன்) இன்று வருகை தர உள்ளார். தற்போதைய இஸ்ரேலின் இத்தாக்குதலைத் தொடர்ந்து ஜோ பிடனுடனான சந்திப்பை ரத்து செய்வதாகவும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அறிவித்துள்ளார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications