அசந்து தூங்கும்போது மூக்கில் புகுந்த கரப்பான் பூச்சி.. அடுத்து என்ன நடந்ததுன்னு பாருங்க.. கொடுமைதான்
பீஜிங்: அசந்து தூங்கிக் கொண்டிருந்த போது முதியவர் ஒருவரது மூக்கு வழியாக கரப்பான் பூச்சி சென்றுவிட்டது. முதல் நாளில் ஒன்று தெரியாத நிலையில், அடுத்தடுத்த நாட்களில் உள்ளே சென்ற கரப்பான் பூச்சி வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது. இதனால் அந்த முதியவர் படாத பாடு பட்டுள்ளார். இதற்கு பிறகு அந்த கரப்பான் பூச்சியை அகற்றிய பின்னரே முதியவர் நிம்மதியடைந்துள்ளார்.
சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள ஹைகோவு பகுதியை சேர்ந்தவர் 58-வயது முதியவர் ஒருவருக்கு வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது தூங்கும் போது அவரது உடலுக்குள் புகுந்த கரப்பான் பூச்சியால் பல நாள் படாத பட்டுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:-

அந்த முதியவர் எப்போதும் போல தனது வேலைகளை எல்லாம் முடித்து விட்டு இரவில் தூங்க சென்றார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, திடீரென அவரது வாயில் ஏதோ அசாதாரணமாக உணர்ந்துள்ளது. தூக்க கலத்தில் அதை பெரிது படுத்தாமல் இருந்துவிடடர். தூங்கி முழித்த பிறகு தொண்டையில் வினோதமாக உணர்ந்து இருக்கிறார். மூக்கு பகுதியில் ஏதோ கவ்வி பிடிப்பது போல இருந்திருக்கிறது.
பிறகு இருமல் வந்துள்ளது. இருமலுக்கு பிறகு இந்த உணர்வு போய் விட்டதால், எதோ ஒரு பொருள் தொண்டையில் சிக்கியிருக்கலாம் என்றும் இருமும் போது நம்மை அறியாமலே அது வெளியேறியிருக்கலாம் எனவும் பெரிது படுத்தாமல் விட்டுவிட்டார். மறுநாள் தனது பணிகளை வழக்கம் போல செய்து விட்டு தூங்க சென்று பிறகு பெரிதாக இதைப்பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.
ஆனால் அடுத்தடுத்த நாட்களில் உள்ளே சென்ற கரப்பான் பூச்சி வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது. அதாவது, மூச்சு விடும் போதெல்லாம் துர்நாற்றம் வீசியிருக்கிறது. காலையில் நன்றாக பிரஷ் செய்கிறோம்.. வழக்கமான தூய்மையை பேணுகிறோம். பிறகு எப்படி இதுபோன்று துர்நாற்றம் வீசுகிறது என நினைத்துக் கொண்டு இருந்த நேரத்தில் திடீரென இருமல் வந்தது.
அப்போது மஞ்சள் நிறத்துடன் வினோதமாக மூக்கில் இருந்து வந்ததை பார்த்த அவர் அச்சத்தில் மருத்துவமனைக்கு ஓடினார். மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவமனைக்கு சென்ற அந்த முதியவரின் மேல்சுவாச பகுதியை பரிசோதித்த மருத்துவர்களுக்கு வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர்.
அங்குள்ள மருத்துவர்கள் சிடி ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போதுதான் சுவாச குழாய் பகுதியில், வெளிப்புறப் பொருள் இருப்பதை கண்டறிந்தனர். பிரான்கோஸ்கோபி சிகிச்சை செய்து பார்த்த போது, மூச்சுக்குழாயில் இறக்கைகளுடன் எதோ ஒருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். உடனடியாக உரிய சிகிச்சை மேற்கொண்டு அதை அகற்றினர். அடுத்த சில நிமிடங்களில், எந்த துர்நாற்றத்தையும் முதியவரால் உணரமுடியவில்லை.
முழு உடல் நலம் பெற்று மறுநாளே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், "இது அரிதான ஒரு நிகழ்வாக உள்ளது. இதுபோன்று வெளிப்புற பொருள் உடலுக்குள் சென்று இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதால் சுயமாக எதையும் யூகித்துக்கொண்டு இருக்க கூடாது. உடனே மருத்துவமனைக்கு சென்று பார்க்க வேண்டும்" என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications