அநியாயமாக பறிபோன 60 பச்சிளம் உயிர்கள்.. அதிகார வெறியால் சூடானில் கொடுமை
சூடான்: சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக, உணவு கிடைக்காமல் குழந்தைகள் காப்பகத்தில் இருந்த ஏறத்தாழ 60 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
ஆசியாவில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் நாடுகளில் சூடான் முக்கியமான நாடாகும். இங்கு கடந்த 2021ம் ஆண்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றிய நிலையில் இவர்களுக்கும் துணை ராணுவ படையினருக்கும் இடையே அதிகார போட்டி உருவாகியுள்ளது. அடுத்து யார் ஆட்சியாளர்களாக மாறப்போகிறார்கள் என்கிற போட்டியில் இரு தரப்பினரும் அவ்வப்போது சிறு சிறு மோதலில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இந்த மோதல் போக்கானது தற்போது தீவிரமடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக உக்கிரமடைந்த இந்த மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். போரினால் பொதுமக்கள் உணவு, நீர் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், கார்ட்டூமில் உள்ள அல்-மய்கோமா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் அருகே சமீபத்தில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதன் காரணமாக அந்த பகுதிக்கு வந்து சேர வேண்டிய உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏதும் வரவில்லை.

எனவே பசியை தாங்காமலும், காயமடைந்த குழந்தைகள் முறையாக சிகிச்சை பெறாமலும் இறக்க தொடங்கின. கடந்த வாரத்தில் மட்டும் 26 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இப்படியாக சுமார் 60 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக குழந்தைகள் காப்பகத்தின் தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, "கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் மோதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதில் ஏராளமான விதி மீறல்கள் நடைபெற்றுள்ளது.
மருத்துவமனைகள், உணவு பொருட்கள் விநியோகம் செய்யும் இடம், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர் இருக்கும் இடம் என எல்லா இடங்களிலும் தாக்குதல் நடத்தப்படுகிறது. கடந்த வாரம் இந்த குழந்தைகள் காப்பகத்திற்கு அருகே திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் காப்பகத்தின் வளாகம் முழுவதும் தூசியும், புகையும் சூழ்ந்தன. குழந்தைகளும் நாங்களும் கடுமையான மூச்சுத்திணறலுக்கு உள்ளானோம்.
இது வெறும் தொடக்கமாகத்தான் இருந்தது. பொதுவாக தாக்குதல் நடத்தப்படும் பகுதிகளுக்கு உணவு பொருட்களை விநியோகம் செய்யமாட்டார்கள். அதேபோல நாங்கள் அனைவரும் உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் இன்றி தவித்தோம். இந்த கொடூர நிலைமை மூன்று வாரங்களுக்கும் மேல் எங்களுக்கு நீடித்தது. எனவே குழந்தைகள் ஒவ்வொருவராக உயிரிழக்க தொடங்கினர். மூன்று மாத குழந்தை தொடங்கி 12 வயது வரை உள்ள குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக இறக்க தொடங்கின.
எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. வெளியில் சென்றால் தாக்குதல் நடத்துவார்கள். அதையும் சமாளித்து சென்றாலும், உணவு பல கி.மீகளுக்கு அப்பால் இருக்கும். அதுவரை உயிரை கையில் பிடித்துக்கொண்டு சென்று திரும்ப முடியாது. எப்போது வேண்டுமானாலும் நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம். ஒவ்வொரு நாளும் 10 முதல் 15 குழந்தைகள் வரை உயிரிழிக்க தொடங்கினர். இந்த செய்தி சில தொண்டு நிறுவனங்களுக்கு தெரிந்தது. இதனையடுத்து அவர்கள் ஐநாவின் உதவியை நாடினார்கள். இப்படியாகதான் எங்களுக்கு உதவி கிடைத்தது" என்று கூறியுள்ளார்.
சூடான் முழுவதும் தற்போது வரை சுமார் 341 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அதேபோல, 860க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இது ஓர் தோராயமான எண்ணிக்கை என்றுதான் சொல்லப்படுகிறது. உள்ளாட்டு போர் காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வெவ்வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications