60 இந்துக்கள்.. இஸ்லாத்துக்கு கட்டாய மதமாற்றம்.. அதிர்ச்சி வீடியோ வெளியீடு.. பாகிஸ்தானில்..!

60 இந்துக்களை இஸ்லாத்துக்கு கட்டாய மதமாற்றம் செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

லாகூர்: பாகிஸ்தானில் 60 இந்துக்கள் வலுக்கட்டாயமாக இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாகிஸ்தானில் சிறுபான்மையினரான இந்துக்கள் 4.5 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.. அவர்கள் பாகிஸ்தானின் மக்கள்தொகையில் 2 சதவீதத்திற்கும் அதிமாகவே உள்ளனர்.. அதில் அதிகமானோர் சிந்து மாநிலத்தில் வசித்து வருகிறார்கள்.

60 Hindus forcibly converted Islam sindh in Pakistan, video

இந்நிலையில், 60 இந்துக்களை இஸ்லாத்துக்கு மாற்றியதாக கூறப்படுகிறது.. அதுவும் நகராட்சித் தலைவர் அப்துல் ரவூப்நிஜாமை முன்னிலையிலேயே இவர்கள் இணைந்துள்ளதாக தெரிகிறது..

நகராட்சி தலைவர் அப்துல் ரவூப்நிஜாமிதான், இந்த கட்டாய மத மாற்றத்துக்கு ஏற்பாடு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து அவரே ஒரு பேஸ்புக் பதிவும் போட்டுள்ளார்..

60 Hindus forcibly converted Islam sindh in Pakistan, video

அதில், "இன்று, 60 பேர் இஸ்லாத்தை என்னுடைய கண்காணிப்பில் ஏற்றுக்கொண்டனர்.. தயவுசெய்து அவர்களுக்காக ஜெபிக்கவும்" என்று பதிவிட்டுள்ளார்... அத்துடன் 2 வீடியோக்களையும் அவரே இணைத்துள்ளார். அதில், ஒரு இஸ்லாமிய மதகுரு, இந்துக்களின் குழு கலிமாவை ஓதி காண்பிக்கிறார்..

இன்னொரு வீடியோவில் அந்த மதகுருவே தோன்றி பேசுகிறார்.. அதில், "மதமாறிய மக்கள், இப்போதுதான் முதல்முறையாக நமாஸை படிக்கிறீர்கள்.. ஒரு முஸ்லீம் நபரின் வாழ்க்கையில் ஒரே நோக்கம் அல்லாவை மகிழ்விப்பதாகும்... அல்லாவால் அங்கீகரிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை மட்டுமே முன்னேறுகிறது" என்று போதிக்கிறார்.

இந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது.. இதனை பலரும் ஷேர் செய்து, கமெண்ட்டுகளை பதிவிட்டும் வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+