பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 61 பேர் பலி;50 பேர் படுகாயம்
கராச்சி: பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள சியா பிரிவு மசூதியில், வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 61 பேர் பலியானார்கள். 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள ஷிகார்பூரில் சிறுபான்மையினரான ஷியா பிரிவு முஸ்லிம்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். அவர்களுக்கான மசூதியில், வெள்ளிக்கிழமையான நேற்று பகல் சிறப்புத் தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது கூட்டத்தின் மத்தியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

தற்கொலைப் படையை சேர்ந்த மனித வெடிகுண்டு மூலம் வெடிக்கச் செய்ததாக செய்தி வெளியானது. அதே சமயம் ‘ரிமோட்' மூலம் குண்டை வெடிக்கச் செய்ததாக மற்றொரு தரப்பு தகவல் தெரிவிக்கிறது.
குண்டு வெடிப்பில் 61 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள். சுமார் 50 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
எனவே இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று தெரிகிறது.
குண்டு வெடித்த இடத்தின் மேற்கூரை தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்தது. இதனால் குண்டு வெடித்ததும், அதன் துகள்கள் கூரையை பிய்த்துக் கொண்டு வெளியே சென்று விழுந்தது. மேற்கூரை பலமான ‘கான்கிரீட்' ஆக இருந்திருந்தால் பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக இருந்திருக்கும் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications