தென் ஆப்பிரிக்காவில் துயரம்.. 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து.. அலறிய மக்கள்.. 63 பேர் பலியான சோகம்
ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள 5 மாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 63 பேர் பலியாகியுள்ளதாகவும், 40 க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் பொருளாதார முனையமாக விளங்கும் இடம் ஜோகன்னஸ்பர்க். கடந்த வாரம் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாடு கூட ஜோகன்னஸ்பர்க்கில் தான் நடைபெற்றது. பிரதமர் மோடி உள்பட பிரிக்ஸ் மாநாட்டில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று இருந்தனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பங்கேற்று இருந்தார். தென் ஆப்பிரிக்க நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு முதுகெலும்பாக இந்த நகரம் உள்ளது.

மேலும் இந்த நகரம் பல்வேறு தொழில் நிறுவனங்களையும் கொண்டதாகும். எப்போதும் மக்கள் நடமாட்டமும் பரபரப்பாகவும் காணப்படும் இந்த நகரத்தில் உள்ள ஒரு ஐந்து மாடிக் கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்து சில நிமிடங்களில் மளமளவென கட்டிடம் முழுவதுமாக பரவியது. கரும்புகையும் வெளியேறியது.

திடீரென கொழுந்து விட்டு எரிந்த தீயால் மக்கள் அலறினர். இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி சுமார் 60க்கும் மேற்பட்ட மக்கள் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 43 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சிலர் புகையை சுவாசித்ததால் கடுமையான உடல் நலபாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
தீ விபத்து நடைபெற்ற கட்டிடத்தை சுற்றிலும் தீ அணைப்பு வாகனங்கள் சூழ்ந்துள்ளன. தீ அணைப்பு வீர்கள் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தற்போது மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
-
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications