150 பேர் பயணிக்கும் அமெரிக்க விமானம்.. 640 ஆப்கானியர்கள் பயணம்.. அதிர்ச்சி அளிக்கும் புகைப்படம்
காபூல்: காபூலில் இருந்து கத்தார் நோக்கி கிளம்பிய மீட்பு விமானத்தில் 640 ஆப்கானியர்கள் பயணம் செய்த புகைப்படம் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் நிலைமை மிகவும் மோசமாகி தலிபான்கள் ஒவ்வொரு மாகாணங்களாக முன்னேறி வந்த நிலையில் அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறி வந்தன. அது போல் உலக நாடுகள் தங்கள் நாட்டு மக்களையும் தூதரக அதிகாரிகளையும் பாதுகாப்பாக அழைத்து செல்ல துருப்புகளையும் விமானங்களையும் அனுப்பி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன் தினம் காபூலை தலிபான்கள் கைப்பற்றினர். இதனால் அதிபர் அஷ்ரப் கானி தப்பியோடிவிட்டார்.

நாட்டை விட்டு வெளியேற முடிவு
தலிபான்கள் மீதான அச்சத்தால் அந்த நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்த மக்கள் காபூல் விமான நிலையங்களை நோக்கி படையெடுக்கிறார்கள். அங்கு வரும் மீட்பு விமானங்களில் தொற்றிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. விமான நிலையம், ரன்வே முழுவதும் மக்கள் தலைகளாகவே காட்சி அளிக்கின்றன.

நெரிசலில் தொங்கிய மக்கள்
விமானத்தில் கூட்ட நெரிசலால் தொங்கி கொண்டு சென்ற இருவர் கீழே விழுந்ததாகவும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காபூல் வந்த அமெரிக்காவின் போயிங் ரக சி 17 கார்கோ விமானம் மீட்க வந்தது.

அமெரிக்க விமானம்
இந்த விமானம் அமெரிக்க தூதரக அதிகாரிகளை அழைத்துச் செல்லவே வந்தது. வெறும் 150 பேர் செல்லும் இந்த விமானத்தில் 640 பேர் பயணம் செய்ததாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. காபூலில் இருந்த அமெரிக்க மீட்பு விமானத்தில் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் ஏறுவதற்கு முன்பே ஆப்கானிஸ்தான் மக்கள் ஏறிக் கொண்டனர்.

விமானத்தின் மீது குதித்த
விமான படையினர் அவர்களை தடுத்து நிறுத்துவதற்கு முன்பாக விமானத்தின் படிக்கெட்டுகளில் ஓடிச் சென்றனர். ஆரம்பத்தில் 800 பேர் வரை பயணம் செய்ததாக கூறப்பட்டது. ஆனால் அதிகாரிகள் 640 பேர் பயணித்ததாக தெரிவித்துள்ளனர். அகதிகளாக வந்த இவர்கள் டெக்சாஸ், விஸ்கான்சின் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படுவர் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications