Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

68 பேர் துடிதுடித்து உயிரிழப்பு.. ஏமனில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து! அதிகாலையில் பெருந்துயரம்

Subscribe to Oneindia Tamil

சனா: ஆப்பிரிக்காவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்ல முயன்ற அகதிகள் கப்பல் ஏமன் அருகே விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 74 பேர் மாயமாகினர். மாயானவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இருப்பினும், அவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு குறைவு என்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த பலரும் எப்படியாவது வறுமையில் இருந்து தப்பிக்க மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அதுபோல செல்வோர் பெரும்பாலும் ஆபத்தான ரூட்களில் படகுகளில் செல்கிறார்கள். அது பல நேரங்களில் அவர்கள் உயிரிக்கே ஆபத்தாக முடிந்துவிடுகிறது. மீண்டும் அப்படியொரு ஷாக் சம்பவம் இப்போது நடந்துள்ளது.

68 African Migrants Die in Yemen Boat Capsize IOM Reports

உயிரிழப்பு

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏடன் வளைகுடாவில் உள்ள ஏமன் கடற்கரை அருகே அகதிகள் வந்த படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த 68 பேர் உயிரிழந்தனர். மேலும் 74 பேர் காணாமல் போயினர். ஐநா இது குறித்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில், இது ஏமன் கடற்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏமன் கடற்கரை பகுதியில் படகு விபத்துகள் தொடர்கதையாகி வரும் நிலையில், இந்த மோசமான விபத்து நடந்துள்ளது. எப்போதும் நூற்றுக்கணக்கான ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர், வறுமை மற்றும் மோதலில் இருந்து தப்பித்து, வளைகுடா அரபு நாடுகளை அடைய முயல்கிறார்கள். இப்போது இதுபோன்ற மோசமான விபத்துகள் அரங்கேறி விடுகின்றன. இந்த குறிப்பிட்ட படகில் 154 எத்தியோப்பிய புலம்பெயர்ந்தோர் பயணித்துள்ளனர்.

என்ன நடந்தது

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏமனின் தென் மாகாணமான அப்யானுக்கு அருகே ஏடன் வளைகுடாவில் படகு மூழ்கியது. இதுவரை கன்ஃபர் மாவட்டத்தில் 54 புலம்பெயர்ந்தோரின் உடல்கள் கரை ஒதுங்கியதாக ஏமனில் உள்ள சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் (IOM) தலைவர் அப்துசத்தோர் ஈசோவ் தெரிவித்துள்ளார். மேலும் 14 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, அப்யான் மாகாண தலைநகரான ஸின்ஜிபார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

இந்த விபத்தில் 12 பேர் மட்டுமே உயிர் பிழைத்ததாகவும், மீதமுள்ள அனைவரும் காணாமல் போனதாகவும் ஈசோவ் தெரிவித்தார். இருப்பினும், அவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு குறைவு என்றே அஞ்சப்படுகிறது.

கரையொதுங்கிய சடலங்கள்

இது தொடர்பாக அப்யான் பாதுகாப்பு இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில், இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், பெரிய அளவிலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடற்கரையில் பல இடங்களில் சடலங்கள் கரையொதுங்கியதாகவும் அப்யான் பாதுகாப்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க உட்படப் பல நாடுகளில் இருந்து மக்கள் இந்த ஏமன் ரூட் வழியாகவே அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல முயல்கிறார்கள். ஏமனில் 10 மேலாக உள்நாட்டுப் போர் நடந்து வந்தாலும் கூட இந்த ரூட் வழியாகவே செல்ல அகதிகள் விரும்புகிறார்கள். சின்ன படகுகளில் அளவுக்கு அதிகமானோர் செங்கடல் அல்லது ஏடன் வளைகுடா வழியாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இந்த அவர்களுக்கு ஆபத்தானதாக மாறுகிறது.

தொடர்கதையாகும் விபத்துகள்

கடந்த சில மாதங்களில் மட்டும் ஏமன் அருகே நடந்த கப்பல் விபத்துகளில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர் அல்லது காணாமல் போயுள்ளனர். மார்ச் மாதம் ஏமன் மற்றும் ஜிபூட்டி கடற்கரை அருகே நான்கு படகுகள் கவிழ்ந்ததில் இரண்டு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர்.. மேலும் 186 பேர் காணாமல் போயினர்.

கடந்தாண்டு மட்டும் சுமார் 60,000க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஏமன் வந்தடைந்தனர். இது 2023ல் வந்த 97,200ஐ விடக் குறைவு. கடற்பகுதியில் ரோந்து அதிகரித்ததே இதற்குக் காரணமாக இருக்கலாம். இருப்பினும், ரோந்தை தாண்டியும் படகுகள் வரவே செய்கின்றன. அவை பல நேரங்களில் இதுபோன்ற விபத்துகளில் சிக்குவதும் கூட தொடர்கதையாகவே உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+