சாலமன் தீவுகளில் நிலநடுக்கம் - ரிக்டரில் 7.5 அலகுகளாக பதிவு - சுனாமி வார்னிங் வாபஸ்!
சாலமன்: ஆஸ்திரேலியாவுக்கு தெற்கே பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமன் தீவுகளுக்கு அருகே இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் 7.5 ரிக்டராக பதிவாகி பிறகு படிப்படியாக குறைந்தது. இறுதியாக ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளது.
இந்த மிதமான நிலநடுக்கமானது சாலமன் தீவுகளில் இருந்து 78 கிலோ மீட்டர் தொலைவில் லட்டா என்ற இடத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும், பசிபிக் கடலில் சாண்டா குரூஸ் தீவுகளுக்கு அருகில் கடலுக்கு அடியில் 33 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதனால் அங்கு 300 கிலோ மீட்டர் தொலைவிற்கு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் இருந்ததாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

சாலமோன் தீவுகள், வனாது, நௌரு, பாபுவா நியூ கினியா, பிஜி, வேல்ஸ் மற்றும் ஃப்யூடுனா, கிரிபாடி தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் தென் பசிபிக் கடலோரம் உள்ள ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
எனினும், ஹவாய் சுனாமி எச்சரிக்கை மையமோ, சுனாமி வர வாய்ப்பில்லை என்று அறிவித்தது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. மேலும், இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அலைகளில் சில மணி நேரங்களுக்கு வேகமிருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்த பொருட்சேதமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு சாலமோன் தீவுகளில் 8.1 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து சுனாமி ஏற்பட்டது. இதில் 52 பேர் பலியாகினர், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.
13 கிராமங்கள் முற்றிலுமாக அழிந்து போயின என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் 90 சதவீத நிலநடுக்கங்கள் ஏற்படும் "பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர்" பகுதியில் சாலமன் தீவுகள் அமைந்திருப்பதால், இங்கு அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுகின்றது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications