இந்துக்களால் அதிரும் வங்கதேசம்.. 7 லட்சம் பேர் குவிந்து போராட்டம்! திரும்பி பார்க்க வைத்த சம்பவம்
டாக்கா: மாணவர்கள் போராட்டத்தால் வங்கதேச பிரமதர் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இதையடுத்தும் அங்கும் போராட்டம் நிற்கவில்லை. அங்குள்ள இந்து கோவில்கள், இந்துக்களின் வீடு, கடைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனால் ஆக்ரோஷமான இந்து மக்கள் 7 லட்சம் பேர் திரண்டு தலைநகர் டாக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரப்பபை ஏற்படுத்தியது.
வங்கதேசத்தின் சுதந்திரத்துக்காக போராடி உயிர் துறந்த தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் முதல் மாணவர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை தொடர்ந்து கடந்த 5ம் தேதி வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

இதையடுத்து கடந்த 8 ம்தேதி வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இந்த இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது. தற்போது ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்தாலும் கூட வங்கதேசத்தில் போராட்டம் என்பது நிற்கவில்லை.
குறிப்பாக இடஒதுக்கீடு, ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடந்த இந்த போராட்டம் தற்போது சிறுபான்மை மக்களுக்கு எதிரானதாக மாறியுள்ளது. அதாவது கடந்த 5ம் தேதி ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து நம் நாட்டுக்கு வந்த நிலையில் வங்கதேசத்தில் சிறுபான்மை மக்களாக வசிக்கும் இந்துக்கள் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது.
மேலும் இந்துக்களின் வீடுகள், கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்துக்களின் சொத்துகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ன. இந்த தாக்குதலில் ஏராளமான இந்து மக்கள் காயமடைந்துள்ளனர். 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை சேர்ந்த 2 இந்து தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதையடுத்து சில இஸ்லாமியர்கள் இந்து மக்களை ஆதரவாக கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் கூட வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் கட்டுக்குள் வரவில்லை. கடந்த 5ம் தேதி ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து இந்தியா வந்த வங்கதேசத்தில் 52 மாவட்டங்களில் இந்துக்களுக்கு எதிராக மொத்தம் 205 தாக்குதல்கள் நடந்துள்ளன.
இதனால் ஆக்ரோஷமான இந்து மக்கள் நேற்று திடீரென்று வங்கதேச தலைநகர் டாக்கா மற்றும் அந்நாட்டின் 2வது பெரிய நகரான சிட்டகாங்கின் வரலாற்று சிறப்பு மிக்க செராகி பஹார் சதுக்கத்தில் ஒன்றாக திரண்டனர். பல லட்சம் பேர் திரண்டு அமைதி ஊர்வலம் மற்றும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். மொத்தம் 7 லட்சம் பேர் திரண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்துக்கள் மீது தாக்குதலை தடுக்க வேண்டும். தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். மேலும் இங்கு நடக்கும் தாக்குதலால் ஏராளமானவர்கள் இந்தியாவில் தஞ்சமடைய செல்கின்றனர். நாங்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் இல்லையா? இடைக்கால அரசு இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதை வேடிக்கை பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுபான்மையினரைத் துன்புறுத்துபவர்கள் மீதான விசாரணையை விரைவுபடுத்த சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு நாடாளுமன்றத்தில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். சிறுபான்மையினருக்கு தனி பாதுகாப்பு சட்டம் வகுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக தலைநகர் டாக்காவின் சென்ட்ரல் பகுதியான ஷாபாக்கில் 3 மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து முடங்கியது. இந்த போராட்டத்தில் இஸ்லாமியர்களும், இஸ்லாமிய மாணவர்களும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இந்துக்களின் இந்த திடீர் போராட்டம் வங்கதேசத்தை நேற்று குலுங்க வைத்தது.
இந்த போராட்டத்தை தொடர்ந்து இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஷ் இந்துக்களுக்கு எதிரான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்துவது என்பது கொடூரமானது. போராட்டங்களை முன்னெடுக்கும் மாணவர்கள் இந்து, கிறிஸ்தவ மற்றும் பவுத்த குடும்பங்களை பாதுகாக்க வேண்டும். அவர்களும் இந்த நாட்டின் மக்கள் தானே? நாட்டை காப்பாற்ற முடிந்த உங்களால் சில குடும்பங்களை காப்பாற்ற முடியாதா என்ன?
சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்த கூடாது என்று நீங்கள் சொல்ல வேண்டும். அவர்கள் நமது சகோதர - சகோதரிகள் தான். நாம் அனைவரும் ஒன்றாக தானே போராடினோம். இனியும் ஒன்றாக இருப்போம். அப்போது தான் தேச ஒற்றுமை வலிமையாக இருக்கும்'' என்றார். இந்த சம்பவம் வங்கதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications