தொடரும் ‘ஹையான்’தாக்குதல்: சீனாவில் 8 பேர் பலி - வெள்ளத்தில் சிக்கிய 1000 மாணவர்கள்
Subscribe to Oneindia Tamil
பீஜிங்: பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தொடர்ந்து சீனாவையும் ‘ஹையான்' புயல் தாக்கியுள்ளது. புயலில் சிக்கி இதுவரை 8 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிலிப்பைன்சில் சுமார் 10 ஆயிரம் பேரை பலிவாங்கிய ஹையான் புயல், தற்போது சீனாவைத் தாக்கியுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

மத்திய சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள சான்லிசி நீர்த்தேக்க படகு விபத்திலும், தெற்கு சீனாவில் வெள்ளத்திலும் சிக்கி இதுவரை 8 பேர் பலியானதாக தெரிகிறது.
சான்லி டவுன்ஷிப்பில் உள்ள நடுநிலைப்பள்ளி ஒன்றில் வெள்ளம் புகுந்ததில், அங்கிருந்த 1000க்கும் அதிகமான மாணவர்கள் இரண்டாவது மாடியில் பத்திரமாகத் தங்க வைக்கப் பட்டனர். அம்மாணவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications