சல்ஸா நடனத்தால் ஸ்தம்பிக்க வைத்த 80 வயது இளமைப் “பாட்டி”!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: லண்டனைச் சேர்ந்த 80 வயது பாட்டி ஒருவர் சல்சா நடனத்தில் அசத்தி நடுவர்களையே பிரமித்து போகச் செய்துள்ளார்.

யூடியூப் வீடியோக்களைப் பார்க்கும் போது ஒரு 2 வயது குழந்தையின் நடனமானது நம் அனைவரையும் ஒரு நிமிடம் வியந்து போக செய்திருக்கும்.

அதேபோல்தான் இப்போது 80 வயது பாட்டி ஒருவரின் சல்சா நடனமும் அப்படித்தான் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

வயது வெறும் எண்ணிக்கை:

வயது வெறும் எண்ணிக்கை:

வயது என்பது வெறும் எண்ணிக்கை மட்டும்தான் என்பதை நீருபித்துள்ளார் 80 வயதான ஃபேடி என்னும் ஓல்ட் லேடி. தாவுகிறார், குதிக்கின்றார், ஏன் அப்படியே பாதத்தை தரையில் தவழ விடுகின்றார்.

அசத்தும் பாட்டி:

அசத்தும் பாட்டி:

இளம் சல்சா நடனக் கலைஞர் ஃபிராங்க் சின்னாட்ராவை விட வேகமாக நடனத்தில் அசத்துகின்றார் இந்த பாட்டி. கிட்டதட்ட 360 டிகிரி கோணத்தில் சுழல்கின்றார்.

சல்சாவில் சாதனை:

சல்சாவில் சாதனை:

ஃபேடியுடன் நடனத்தில் அசத்திய நிக்கோ மிகவும் இளமையான, உயரமான பார்ட்னர் அவருக்கு. லண்டனின் மிகவும் பாப்புலரான ரியாலிட்டி ஷோ ஒன்றில்தான் இந்த அருமையான நடனப் பதிவு நிகழ்ந்தது.

கொட்டாவி விட்ட நடுவர்கள்:

கொட்டாவி விட்ட நடுவர்கள்:

முதலில் பாட்டி என்ன ஆடப்போகின்றார் என்று கொட்டாவியெல்லாம் விட்ட நடுவர்கள் பாட்டியின் நடனத்தைப் பார்த்து அப்படியே பேச்சிழந்து போயினர்.

வியப்பின் உச்சம்:

வியப்பின் உச்சம்:

அதில் ஒரு நடுவரான சைமன் காவ்ல், கடுமைக்கு பெயர் போனவர். அவரே வியந்து போனார் என்றால் பாட்டியின் நடனத்தைப் பற்றிய வேறு விளக்கம் தேவையில்லை. நடனம் ஆரம்பித்தபோது சிவப்பு குறியைக் காமித்த அவர், பாட்டியின் நடனத்தைப் பார்த்து ஸ்தம்பித்துப் போனார்.

ஸ்தம்பித்துப் போன அரங்கம்:

ஸ்தம்பித்துப் போன அரங்கம்:

சுழன்று, சுழன்று ஆடி ஃபேடி முடித்தபோது நடுவர்கள் அனைவரும் எழுந்து நின்று அவரின் நடனத்திற்கு மரியாதை செலுத்தினர்.

இதயங்களை வென்றவர்:

இதயங்களை வென்றவர்:

ஒருவேளை இந்தப் பாட்டி போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும் உலக அளவில் பலரின் நெஞ்சங்களை வெற்றி பெற்றுள்ளார் என்பதுதான் அவருக்கான மிகப்பெரும் பரிசு.

சல்ஸா நடனத்தால் ஸ்தம்பிக்க வைத்த 80 வயது இளமைப் “பாட்டி”!

லண்டனைச் சேர்ந்த 80 வயது பாட்டி ஒருவர் சல்சா நடனத்தில் அசத்தி நடுவர்களையே பிரமித்து போகச் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+