81 வயதிலும் தினசரி 100 புஷ் அப்.. அசர வைக்கும் சீனப் பாட்டி!
பெய்ஜிங்: சீனாவில் 81 வயது பெண்மணி ஒருவர் தினசரி 100 புஷ்- அப் எடுத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார். அதுவும் 5 நிமிடத்தில் இதைச் செய்து அனைவரையும் மயக்கமடைய வைக்கிறார்.
குனிந்து நிமிரவே பல நிமிடம் தேவைப்படும் இக்காலத்து இளம் பெண்களுக்கு மத்தியில் இந்த குடுகுடு பாட்டி நல்ல உடல் பலத்துடன் இருப்பது அனைவரையும் அதிசயிக்க வைக்கிறது.
சீனாவின் பியூஜியான் மாகாணத்தைச் சேர்ந்தவர் லி குவாசுவான். கடந்த ஜூலை மாதம் தனது 81வது பிறந்தநாளைக் கொண்டாடிய இவர், இப்போதும் தினமும் பேஸ்கட் பால் விளையாடுவதையும், புஷ் -அப்ஸ், சிட்-அப்ஸ் போன்ற உடற்பயிற்சிகளைச் செய்து வருகிறார்.
புதிய உடற்பயிற்சி...
மேலும், ‘ரோலி -போலி ரோல்' என்ற உடற்பயிற்சி ஒன்றையும் இவர் கண்டு பிடித்துள்ளார்.
5 நிமிடத்தில்...
உடற்பயிற்சிகள் மூலம் எலும்புகள் மற்றும் தசையை உறுதியாக வைத்துக் கொள்ள முடியும் என நம்புகிறாராம் இவர். எனவே, தினமும் 100 புஷ்-அப்ஸ்களை அதுவும் ஐந்தே நிமிடத்தில் செய்கிறாராம் லி.
விவசாயி...
விளையாடுவதை நாம் மிகவும் விரும்புகிறேன், உடற்பயிற்சி செய்வதே என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது எனக் கூறும் லீ, தனது 68 வயதில் தான் விளையாட்டுத் துறையில் நுழைந்து கலக்கலாமே என முடிவெடுத்தாராம். அதற்கு முன்னர் வரை விவசாய வேலைகளைச் செய்து வந்துள்ளார் இவர்.
வேகமான நடை...
இவ்வாறு கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்யத் தொடங்கியதில் இருந்து மிகவும் ஆரோக்கியமாக உணர்கிறாராம் லீ. மேலும், முன்பை விட இப்போது தான் அவரால் வேகமாக நடக்க முடிகிறதாம்.
பயிற்சி வகுப்புகள்...
அதேபோல், தனது நடை மற்றும் குரலைக் கொண்டு தனது வயதை நிச்சயமாக யாராலும் கணிக்க முடியாது என கூறுகிறார் லீ. தற்போது இவர், தன்னைப் போலவே விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் மிகவும் ஆர்வமாக உள்ளவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் எடுத்து வருகிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications