முதுகுவலிக்காக! 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சீனா பாட்டி! வயிற்று வலியால் மருத்துவமனையில் அட்மிட்
பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த 82 வயது மூதாட்டி ஒருவர், தனது முதுகுவலிக்காக உயிருடன் 8 சிறிய தவளைகளை விழுங்கிய நிலையில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
கிழக்கு சீனாவின் ஜீஜியாங் மாகாரணத்தை சேர்ந்தவர் ஜாங் (83). இவருக்கு கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் தீராத வயிற்று வலி ஏற்பட்டதாம். இதையடுத்து அவரது உறவினர்கள் ஹாங்ஜௌவில் உள்ள மருத்துவமனையில் ஜாங்கை சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பொதுவாக வயிற்று வலி என்றால் என்ன சாப்பிட்டீர்கள் என மருத்துவர்கள் கேட்பது போல் அந்த மருத்துவமனை டாக்டரும் கேட்டாராம். அதற்கு அந்த மூதாட்டியின் மகன், "என் தாய் உயிருடன் பிடித்து 8 சிறிய தவளைகளை பிடித்து சாப்பிட்டார்.
அடிவயிற்று வலி
அது முதல் அவரால் நடக்க முடியாத அளவுக்கு அடிவயிற்றில் வலி ஏற்பட்டதாக" தெரிவித்தாராம். இதை கேட்ட மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது மகனிடம் மருத்துவர்கள் நடத்திய விசாரணையில், ஜாங்கிற்கு நீண்ட காலமாக முதுகுவலி இருந்து வந்ததாம்.
உயிருடன் தவளை
உயிருடன் தவளையை உட்கொண்டால் முதுகுவலி குறையும் என்பது ஜாங்கின் நம்பிக்கையாக இருந்ததாம். இதை அவரே நம்பினாரா, இல்லை யாராவது அவருக்கு சொன்னார்களா என தெரியவில்லை. எதை தின்றால் பித்தம் தெளியும் என்றிருந்த மூதாட்டி, தனது குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லி உயிருடன் தவளைகளை பிடித்து வர சொன்னாராம்.
தவளைகளை விழுங்கிய பாட்டி
ஆனால் அவர்களிடம் அவற்றை சாப்பிட போவதாக சொல்லாமல் வேறு ஏதோ ஒரு காரணத்தை தெரிவித்தாராம். இதையடுத்து அந்த தவளைகளை பத்திரமாக வைத்திருந்த ஜாங், முதல் நாள் 3 தவளைகளையும், அடுத்த நாள் 5 தவளைகளையும் உயிருடன் விழுங்கினாராம்.
அசவுகரியம்
இந்த தவளைகள் எல்லாம் நம் உள்ளங்கையை விட சிறியவையாகும். இதை சாப்பிட்ட போது மூதாட்டிக்கு லேசான அசவுகரியம் ஏற்பட்டதாம். பிறகு அடுத்த சில நாட்களில் மூதாட்டிக்கு அதிக அளவு வயிற்று வலி ஏற்பட்டது. அப்போதுதான் தான் தவளைகளை சாப்பிட்டதை குடும்பத்தினரிடம் தெரிவித்தாராம்.
ஒட்டுண்ணி
இதையடுத்து மூதாட்டிக்கு பரிசோதனை நடத்தியதில் அவருக்கு ஒட்டுண்ணித் தொற்றுகளும் ரத்த குறைபாடுகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது தவளையில் இருந்த அபாயகரமான ஒட்டுண்ணிகள் மூதாட்டியில் வயிற்று பகுதிக்கு வந்துவிட்டதாம். இதனால்தான் அவருக்கு வயிற்று வலி என கண்டறியப்பட்டது.
டிஸ்சார்ஜ் ஆன பாட்டி
இதையடுத்து ஜாங்கிற்கு சிகிச்சை கொடுத்து இரு வாரத்தில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதுகுறித்து அந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் வூ ஜோங்வென் கூறுகையில், இது போன்று சம்பவங்கள் அண்மைக் காலமாக ஏராளமானவை நடந்துள்ளன.
எலி விழுங்குதல்
தவளையை விழுங்குவது, எலி, மீன் உள்ளிட்டவைகளை உயிருடனோ, சமைக்காமலோ விழுங்குவது என சிகிச்சைக்கு வந்துள்ளனர். இன்னும் சிலர் தவளையின் தோலை எடுத்து தங்கள் தோலில் வைத்து சிகிச்சை அளித்துக் கொள்வதாக கூறியிருக்கிறார்கள்.
ஆபத்தான சுய வைத்தியம்
இது போல் செய்தவர்கள் எல்லாம் முதியவர்கள். அவர்கள் தங்களது உடல் உபாதைகளை குடும்பத்தினரிடம் சொல்வதை தவிர்த்துவிட்டு அவர்களாகவே ஏதாவது ஒரு வைத்தியம் என்ற பெயரில் இது போன்ற செயல்களை செய்து கடைசியில் மருத்துவமனைக்கு வருகிறார்கள்.
தோல் நோய் குணமாகும்
தவளையின் தோல் , மனிதர்களின் தோல் நோயை குணப்படுத்தும் என யாரோ கூறியதை நம்பி அந்த தோலை எடுத்து தோல் நோய் இருக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளும் போக்கும் இருக்கிறது. தவளையின் தோல், தோல் நோயை குணப்படுத்தும் என்பதற்தான எந்த ஆதாரமும் இல்லை. அது போல் தவளைகளை விழுங்கினால் முதுகு வலி நீங்கும் என்பதும் அவநம்பிக்கை.
என்ன நடக்கும்
இது போல் தவளை, எலி உள்ளிட்டவைகளை உள்ளுக்குள் சாப்பிடும் போது அதில் இருக்கும் ஒட்டுண்ணிகள் நம் உடலில் நுழைந்துவிடுகின்றன. இதனால் கண் பார்வை மங்குதல், தொற்று ஏற்படுதல், இன்னும் சொல்ல போனால் உயிருக்கே உலை வைக்கும் நிலையும் ஏற்படும். இவ்வாறு மருத்துவர் தெரிவித்தார்.
தோல் நோய்க்கு சிகிச்சை இதுவா?
ஜாங் வசித்த அதே மாகாணத்தில் எக்சிமா எனப்படும் தோல் நோய் குணமாக தனது 6 மாத குழந்தையின் கையை காரிய அசிடேட் கரைசலில் விட்டதால் குழந்தைக்கு உடலில் விஷம் பரவிய சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications