86 வயதில் வங்கியை கொள்ளையடிக்க முயன்ற பாட்டி.. வெற்று துப்பாக்கியை வைத்து கெத்து காட்டினார்
வாஷிங்டனில் 86 வயது பாட்டி ஒருவர் வங்கியை கொள்ளையடிக்க முயன்று இருக்கிறார்.
வாஷிங்டன்: வாஷிங்டனில் 86 வயது பாட்டி ஒருவர் வங்கியை கொள்ளையடிக்க முயன்று இருக்கிறார். தற்போது இவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
காலையில் மக்கள் கூட்டம் இருக்கும் நேரம் பார்த்து சரியாக உள்ளே வந்த அந்த பாட்டி துப்பாக்கியை காட்டி பணத்தை கேட்டு இருக்கிறார். இவரால் சரியாக நடக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் அந்த வங்கியை கொள்ளை அடிக்க முயன்றதற்கு முக்கியமான காரணம் ஒன்றும் சொல்லி இருக்கிறார். அதேபோல் அவர் வங்கியை கொள்ளையடிக்க முயன்ற போது மற்றொரு காமெடியான சம்பவமும் நடந்துள்ளது.

துப்பாக்கியோடு வந்த பாட்டி
இரண்டு நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் அருகில் இருக்கும் முக்கியமான வாங்கி ஒன்றில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. வங்கிக்குள் வாக்கிங் குச்சியுடன் உள்ளே வந்த 86 வயது பாட்டி ஒருவர் துப்பாக்கியை நீட்டி அனைவரையும் மிரட்டி இருக்கிறார். விலங்கு வேட்டைக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கியை அந்த பாட்டி பயன்படுத்தி இருக்கிறார்.

போலீசார் கைது செய்தனர்
இந்த செய்தி தெரிந்ததும் போலீசார் உடனடியாக அங்கு வந்தனர். அந்த பாட்டிக்கும் அங்கு இருந்தவர்களுக்கும் எதுவும் ஆகாத வகையில் அவரை கைது செய்தனர். மேலும் அந்த பாட்டி இதன் காரணமாக அதே இடத்தில் மயங்கி விழுந்தார். பின் உடனடியாக அந்த பாட்டிக்கு முதல் உதவி செய்யப்பட்டு பின் விசாரணை செய்யப்பட்டார்.

துப்பாக்கியில் ஒன்றும் இல்லை
இந்த நிலையில் போலீசார் அவரின் துப்பாக்கியை வாங்கி சோதனை செய்தனர். துப்பாக்கியில் ஒரு குண்டு கூட இல்லாமல் இருந்தது. மேலும் அவரின் ஹேண்ட்பேக்கிலும் எங்கும் குண்டுகள் காணப்படவில்லை. கை தவறி கூட யாரும் மரணம் அடைந்துவிடக்கூடாது என்பதற்காகவே அந்த பாட்டி குண்டுகள் இல்லாமல் வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஏன் இந்த கொள்ளை முயற்சி
தற்போது இந்த வித்தியாசமான கொள்ளை முயற்சிக்கு காரணம் என்ன என்று காரணம் தெரியவந்துள்ளது. அந்த சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் அந்த பாட்டி அதே வங்கிக்கு வந்து இருக்கிறார். அப்போது அவர் கணக்கில் இருந்து 400 டாலர் வங்கியால் எதோ ஒரு விஷயத்திற்காக அபராதமாக வசூலிக்கப்பட்டு இருக்கிறது. அந்த அபராத தொகையை மீண்டும் வசூலிக்கவே இவர் இப்படி கொள்ளையில் இறங்கியதாக தெரிய வந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications