10 வருடங்களில் 9 குழந்தைகள்... திருமண வாழ்வில் 87 மாதங்கள் கர்ப்பிணியாக வாழ்ந்த ‘சூப்பர் மம்மி’!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்து பெண்ணொருவர் பத்தாண்டுகளில் 9 குழந்தைகளைப் பெற்று சூப்பர் மம்மியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இங்கிலாந்தின் கெனட்டை சேர்ந்த ஜேசன் (41) என்பவரது மனைவி தோனியா (40). பிறந்தநாள் விழாவொன்றில் தோனியாவைப் பார்த்து காதல் வயப்பட்ட ஜேசன், கடந்த 2000ம் ஆண்டு ஜூன் மாதம் அவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இல்லறவாழ்க்கையை தொடங்கிய அத்தம்பதிக்கு தற்போது 9 குழந்தைகள் உள்ளனர்.

9 babies in just 10 years for supermum who was permanently pregnant

இந்த பத்தாண்டு காலத்தில் சுமார் 87 மாதங்கள் அதாவது 7 ஆண்டுகள் கர்ப்பிணியாகவே இருந்துள்ளார் தோனியா. தற்போது தோனியாவின் முதல் குழந்தைக்கு 12 வயதும், அவருடைய கடைசி குழந்தைக்கு 2 வயதும் ஆகிறது.

தனது குடும்பத்தை அழகிய குழு என கூறும் தோனியா, இது தொடர்பாக மேலும் கூறுகையில் :-

ரொம்ப மகிழ்ச்சி...

என்னுடைய 9 குழந்தைகளையும் பார்க்கும்போது எல்லாம் மகிழ்ச்சி அடையும் மற்றவர்கள் நான் மிகவும் கஷ்டப்படுகிறேன் என்று நினைக்கிறார்கள் ஆனால் நான் சமையல் அறையில் சுறுசுறுப்பாக வேலை செய்து எனது குழந்தைகளை கவனித்து வருகின்றேன்.

உறவினர்கள் கிண்டல்....

எனக்கு 9 குழந்தைகள் உள்ளதால் எனது கணவருக்கு வேறுவேலையே இல்லையா? என்று மற்றவர்கள் அவரை வெளிப்படையாகவே கிண்டல் செய்வார்கள். இதனால் அவர் கோபம் அடைவார்.

நல்ல கணவர்...

ஆனால் அவர் எங்களையும் கவனித்துக் கொண்டு வேலையையும் சிறப்பாக செய்து வருகிறார். மிகவும் கடிணமாக உழைக்கும் அவர் எங்களையும் மிகவும் அதிகமாக நேசிக்கிறார். இவ்வாறு நடந்து கொள்வது மிகவும் கடினம். ஆனால் அவர் மிகவும் நன்றாக செயல்படுவார். நாங்கள் ஒரு நல்ல குழுவை உருவாக்கியுள்ளாம்' எனத் தெரிவித்துள்ளார்.

தச்சுத் தொழில்...

சொந்தமாக ஒரு தச்சு தொழில் செய்து வரும் ஜேசனுக்கு, அவருடைய 7 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகளே உதவியாக உள்ளனராம்.

பெரிய குடும்பம்...

தனது குடும்பம் பற்றி ஜேசன் கூறுகையில், ‘பெரிய குடும்பத்திற்காக நாங்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்ளவில்லை. முதல் குழந்தையை வயிற்றில் சுமந்த தோனியாவிற்கு அது நிலைக்கவில்லை. தோனியா 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோது அவருடையை குழந்தைக்கு இதய துடிப்பு இல்லை என்று கூறிவிட்டனர். பின்னர் அவருடைய கர்ப்பம் கலைக்கப்பட்டுள்ளது.

குழந்தைப் பாசம்...

குழந்தையை தோனியாவிடம் டாக்டர்கள் காட்டவே இல்லை. தனது முதல் குழந்தையை இழந்த தோனியா துடித்துவிட்டார். இதனை அடுத்து அவருக்கு குழந்தை மீதான பாசம் அதிகரித்துவிட்டது. இதனையடுத்து அவர் மீண்டும் கர்ப்பம் ஆனார். ஆனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் மாதம் வந்தால்...

கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் தோனியாவிற்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. வீட்டில் வைத்தே தோனியாவிற்கு பிரசவம் நடந்துள்ளது. அடுத்த 12 மாதங்கள் கழித்து 2002 அக்டோபர் மாதம் 14ம் தேதி தோனியாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. அடுத்தடுத்து அக்டோபர் மாதங்களில் அவர்களுக்கு தொடர்ந்து குழந்தை பிறந்துள்ளது.

தொடர்ந்து கர்ப்பம்...

தனது பிரசவங்கள் குறித்து தோனியா கூறுகையில், ‘நான் திருமணம் ஆனதில் இருந்தே கர்ப்பமாகவே இருந்தேன். நான் கர்ப்பமாக இருப்பதை மிகவும் விரும்புகிறேன்' என சிரித்துக் கொண்டே தெரிவிக்கிறார்.

இரத்த அழுத்தம்...

கடந்த 2012ம் ஆண்டு தங்களது குழந்தைகள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்ததை அடுத்து தோனியா குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்திக் கொண்டுள்ளார். தோனியாவிற்கு இரத்த அழுத்தம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவர்கள் அறிவுரைப்படி குழந்தைப் பெறுவதை நிறுத்திக் கொண்டாராம் தோனியா..

உணவுச் செலவு...

இந்தக் குடும்பத்தின் உணவு செலவுக்கு மட்டும் வாரம் 300 பவுண்ட்களுக்கு மேல் செலவாவதாகத் தெரிவித்துள்ள தோனியா, குழந்தைகளை நல்லபடியாக கவனித்து கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+