9 வயசு... 43 கொசுக்கடி.. "சாதனை" படைத்த ரஷ்ய சிறுமிக்கு பரிசும், பாராட்டும்.. !

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: கொசுக்களோடு குடும்பம் நடத்தி வருபவர்கள் நம்மவர்கள். அதிலும் சென்னையில் கொசுக்கடி வாங்காத ஒரு குடிமகனும், குடிமகளும் இருக்கவே முடியாது. ஆனால் ஜஸ்ட் 43 கொசுக்கடி வாங்கிய 9 வயது சிறுமிக்குப் பரிசு கொடுத்து பாராட்டிக் கெளரவப்படுத்தியுள்ளனர் ரஷ்யாவில்.

நம்ம ஊரில் கொசுவை ஒரு கையால் அடித்து விட்டு, மறு கையால் கோகோ கோலா குடிப்பது ரொம்பச் சாதாரணம். ஆனால் வெளிநாடுகளில் கொசுவைப் பார்த்தாலே ஏதோ டிராகுலாவைப் பார்த்தது போல அலறி ஓடுவார்கள்.

இந்த நிலையில் ரஷ்யாவில் வருடா வருடம் கொசுத் திருவிழா என்ற ஒரு வினோத திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. பெரஸ்னிகி என்ற ஊரில் இந்தத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

காட்டுக்குள்ளே திருவிழா

காட்டுக்குள்ளே திருவிழா

இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியே யார் அதிக அளவில் கொசுக்கடி வாங்குகிறார்கள் என்பதுதான். அதற்காக நகருக்கு அருகே உள்ள காட்டுப் பகுதிக்குள், வெறும் உடம்போடு போய் தங்கி விட்டு வர வேண்டும்.

இரினிவாவுக்கு முதல் பரிசு

இரினிவாவுக்கு முதல் பரிசு

இந்த விழாவில் கலந்து கொண்வடர்களிலேயே 9 வயதான இரினா இல்யுகினா என்ற சிறுமிதான் அதிக அளவிலான கொசுக்கடியை வாங்கிக் கொண்டு வெளியே வந்து முதல் பரிசைப் பெற்றார்.

43 கடி பாஸ்!

43 கடி பாஸ்!

இந்த சிறுமியின் உடலில் மொத்தம் 43 கொசுக் கடிகள் உள்ளன. இவரைத்தான் அதிக அளவில் கொசுக்கள் கடித்திருந்தன. எனவே இவருக்கே முதல் பரிசைக் கொடுத்து பாராட்டியுள்ளனர்.

டேஸ்ட்டியான பெண்

டேஸ்ட்டியான பெண்

பரிசு கிடைத்ததோடு மட்டுமல்லாமல் ரொம்பவும் டேஸ்ட்டியான பெண் என்ற செல்லப் பட்டத்தையும் இரினாவுக்கு இந்தத் திருவிழாவும், கொசுக்கடியும் தேடிக் கொடுத்து விட்டது. ஊரெல்லாம் கொசுவுக்குப் பயந்து நடுங்கும் நிலையில் அதுவும் ஜிகா பீதி பட்டையைக் கிளப்பி வரும் நிலையில் ரஷ்யாவில் கொசுத் திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

100 கொசுக்கடி வாங்கிய சாகசக்காரர்

100 கொசுக்கடி வாங்கிய சாகசக்காரர்

ஆனால் இரினா வாங்கிய கொசுக்கடி கடந்த 2013ல் வெற்றி பெற்றவர் வாங்கியதை விட குறைவுதான். 2013ல் வெற்றி பெற்றவர் உடம்பில் 100க்கும் மேற்பட்ட கொசுக்கடி இருந்ததாம்.

இதுக்கெல்லாம் ஒலிம்பிக் கிடையாதா பாஸ்!

இதுக்கெல்லாம் ஒலிம்பிக் கிடையாதா பாஸ்!

பேசாமல் இதையும் ஒலிம்பிக்கில் சேர்த்தால் இந்தியாவுக்கு கண்டிப்பாக பதக்கம் கிடைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.. !

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+