97 வயதில் ஹைஸ்கூலை முடித்து ‘டாக்டர்’ பட்டமும் வாங்கிய அமெரிக்கப் பாட்டி
வாஷிங்டன்: அமெரிக்காவில் 97 வயது பாட்டி ஒருவர் 79 ஆண்டுகளுக்கு முன் பாதியில் கை விட்ட உயர்நிலைக்கல்வியை முடித்து, தற்போது கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலத்தைச் சேர்ந்தவர் மார்கரெட் தாமஸ் பெக்கெமா. கடந்த 1936-ம் ஆண்டு இவர் கிராண்ட் ராபிட்ஸ் நகரின் கத்தோலிக் சென்ட்ரல் ஹைஸ்கூலில் படித்து வந்தார். அப்போது கேன்சரால் பாதிக்கப்பட்ட தனது அம்மாவைப் பார்த்துக் கொள்வதற்காக அவர் தனது பள்ளிப் படிப்பை பாதியில் விட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து மார்கரெட்டுக்கு திருமணமும் நடைபெற்றது. இதனால் அவரது உயர்கல்விக் கனவாகவே முடிந்தது. கணவர், குழந்தைகள், பேரன், பேத்திகள் என வாழ்ந்து வரும் மார்கரெட்டுக்கு தற்போது 97 வயதாகிறது.
இந்நிலையில், தனது உயர்நிலைக் கல்வி ஆசை குறித்து சமீபத்தில் தனது பேரப்பிள்ளைகளிடம் அவர் தெரிவித்துள்ளார். அதைக் கேட்ட பேரன், பேத்திகள் பாட்டியின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து மார்கரெட் படித்த உயர்நிலைப்பள்ளியைத் தொடர்பு கொண்டு, தனது பாட்டியின் கதையைக் கூறியுள்ளனர். இது தொடர்பாக ஊடகங்களிலும் செய்தி வெளியானது.
97 வயதிலும் கல்வி மீது தீராக்காதல் கொண்டிருக்கும் பாட்டிக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க அந்தப் பள்ளி முடிவெடுத்தது. இதையடுத்து, கடந்த 29-ம்தேதி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடந்த விழாவில் மார்கரெட்டிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
சுமார் 79 ஆண்டுகளுக்குப் பின் தனது உயர்நிலைக் கல்வி நிறைவேறிய சந்தோஷத்தில் ஆனந்தக் கண்ணீர் வடித்த மார்கரெட், "நான் ஒன்றுமே தெரியாதவள். என்னுடைய சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துவதென்றே தெரியவில்லை" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications