ஏ தாத்தா..நீ கொஞ்சம் நில்லு.. உனக்கு எதுக்கு இத்தனை லொள்ளு.. கலகலக்கும் சீனத்து தாத்தா!
105 வயது தாத்தாவின் உடற்பயிற்சி செய்யு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பெய்ஜிங்: ஆள் குள்ளம்தான்... இன்னும் கண்ணாடி கூட போடல.. இந்த தாத்தாவுக்கு வயசு என்ன தெரியுமா? 105!
சைனாக்காரங்க எப்பவுமே சந்தோஷமாக உழைப்புக்கு மரியாதை தருபவர்கள்.. ஆயுள் கெட்டி.. (பொருட்கள்தான் சீக்கிரம் புட்டுக்கும்) இதெல்லாம் நமக்கு தெரிந்த விஷயம்தான்.

ஆனால் இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அந்த நாட்டு தாத்தா ஒருவர் தெருவில் நடக்கிறார்.. அது ஜாக்கிங்கா.. வாக்கிங்கா.. டான்சிங்கா.. என்று தெரியவில்லை. அப்படி ஒரு ஜிங் ஜிங் ஆக இருக்கிறது அவரது நடை.
யாங்ஷூ நகரைச் சேர்ந்தவர் இந்த தாத்தா பெயர்! கோட், சூட், காலுக்கு ஷூ, கைக்கு கிளவுஸ் என அணிந்து கொண்டு வேகவேகமாக ஜம்ப் ஆகி ஜம்ப் ஆகி நடக்கிறார். கூடவே ஒரு ட்ரேட் மார்க் சிரிப்பு.. பார்க்கவே நமக்கு செம உற்சாகமாக இருக்கிறது. பிறகுதான் தெரிகிறது.. தாத்தா செய்து காட்டுவது ஃபிட்னஸ் எக்சர்சைஸாம்!
தாத்தா..ன்னு சொல்றோமே தவிர, அவர் கையில் ஊன்றுகோல், கண்ணாடி, எதுவுமே இல்லை. ஜாலியாக நமக்கு நடந்து காட்டுகிறார். தாத்தா வயசுக்கு நாமெல்லாம் இருப்போமான்னு தெரியாது.. ஆனா தாத்தா இன்னும் சில காலம் இப்படியே ஆரோக்கியமா இருக்கணும்.. அவ்வளவு ஹேப்பியா இருக்கு இந்த தாத்தாவைப் பார்த்தா!
A 105-year-old man in Yangzhou is going viral for his amazing moves during a fitness exercise pic.twitter.com/VqfVPDQwR5
— China Xinhua News (@XHNews) 29 April 2019
நம்ம ஊரு கிராமத்து ஆத்தாக்கள் கூட இதுபோல நிறைய பிட்னஸ் வித்தைகள் அறிந்தவர்கள்தான்.. ஆனால் நாமெல்லாம் எங்கே கேட்கிறோம். இந்த தாத்தாவைப் பார்த்தாவது உற்சாகமாக இருக்க முயற்சிப்போமே.












Click it and Unblock the Notifications