மனிதன் எத்தனை மனிதனடா... !
ஜோஹன்னஸ்பர்க்: புதிய வகை மனித மூதாதையரை தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹோமோ நலெடி என்று இந்த புதிய வகை மனித இனத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இது நமது மனித இனத்திற்கு 3 வகை இனத்திற்கு முன்பு இருந்த மனித இனம் என்று கருதப்படுகிறது.
மனிதர்களின் பரிமாண வளர்ச்சியானது 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதாக கருதப்படுகிறது. மனிதர்கள் உருவானதே ஆப்பிரிக்காவில்தான்.
முதன் முதலில் தோன்றிய மனித இனத்தின் அடையாளங்களை நாம் பாசில் படிமங்கள் மூலம்தான் கண்டறிந்துள்ளோம். எத்தியோப்பியாவில் இந்த முதல் படிமம் நமக்கு 1990ல் கிடைத்தது.
மனித இனம் கடந்து வந்த பரிமாணப் பாதை குறித்த ஒரு பார்வை

அர்டிபிதெகஸ் ரேமிடஸ்...
இதுதான் முதல் மனித இனமாக கருதப்படுகிறது. இந்த மனித இனம் 40.4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. எத்தியோப்பாவில் இதுதொடர்பான பாசில் படிமம் கிடைத்தது. இந்த மனித இனம் மரத்தில் ஏறக் கூடிய வகையில் திறமை படைத்ததாக இருந்தது. மேலும் தற்போதைய மனிதர்களைப் போல நேராக நிமிர்ந்து நடக்கும் திறமையும் இதனிடம் இருந்துள்ளது.

ஆஸ்டிரலோபிதகஸ் அபரென்சிஸ்...
இந்த மனிதர்கள் 30.9 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் இதுதொடர்பான பாசில் படிமகங்கள் கிடைத்துள்ளன. ஆனால் வேறு எந்தப் பகுதியிலும் இந்தப் படிமங்கள் கிடைக்கவில்லை. எனவே ஆப்பிரிக்காவில் மட்டும் இந்த மனிதர்கள் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த மனிதர்கள் பெரும்பாலும் இரு கால்களால் நடக்கக் கூடியவர்களாக இருந்துள்ளனர். அதேசமயம் இவர்கள் ஆரம்ப காலத்தில் மரத்தில் வசிக்கக் கூடியவர்களாவும் இருந்துள்ளதாக கருதப்படுகிரது.

ஹோமோ ஹெபிலிஸ்...
இந்த மனிதர்கள் 20.8 லட்சம் ஆண்டுகளுக்க முன்பு இருந்திருக்கலாம். இவர்களுக்கு மூளை சற்று பெரிதாக இருந்துள்ளது. பற்கள் சிறிதாக இருந்துள்ளன. கைகள் நீளமாக இருந்துள்ளன.

ஹோமோ நெலடி...
இந்த மனித இனம்தான் தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பற்கள் சிறிதாகவும், நன்றாகவும் இருந்துள்ளன. மனிதர்களைப் போலவே இருந்துள்ளனர். அதேசமயம், விரல்கள் சற்று வளைந்து காணப்படுகின்றன. சிறிய மூளையே இருந்துள்ளது.

ஹோமோ எரக்டஸ்...
10.9 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருந்திருக்கலாம். இப்போது உள்ள மனிதர்களைப் போன்ற உடல் அவர்களுக்கு இருந்துள்ளது. நம்மைப் போலவே கிட்டத்தட்ட இருந்துள்ளனர். இருப்பினும் இப்போதைய மூளையை விட சிறிய மூளை கொண்டவர்களாக இருந்துள்ளனர்.

ஹோமோ நியான்டர்தாலென்சிஸ்...
2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருந்திருக்கலாம். இவர்கள்தான் நவீன மனிதர்களின் முன்னோடிகள் ஆவர். ஆப்பிரிக்காவைத் தவிர ஈரோஷியேவிலும் இவர்கள் வாழ்ந்துள்ளனர். குள்ளமாக இரு்துள்ளனர். நல்ல கட்டுமஸ்தாக இருந்துள்ளனர். சற்று பெரிய மூளை கொண்டவர்களாக இருந்துள்னர்.

ஹோமோ சேப்பியன்ஸ்...
இவர்கள்தான் நாம். 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நாம் உருவாகியுள்ளோம். உரு மாறியுள்ளோம். ஆப்பிரிக்காவில்தான் நமது மூதாதையர் உருவாகியுள்ளனர். ஹோமோ ஹெய்டெல்பர்கென்சிஸ் என்ற மூதாதையரிடமிருந்து நாம் வந்ததாக கூறாப்படுகிறது. ஆப்பிரிக்காவை விட்டு இவர்களில் ஒரு பிரிவினர் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்துள்ளனர். உலகின் பிற பகுதிகளுக்குப் பரவியுள்ளனர். போன இடங்களில் இருந்த அவர்கள் முந்தைய மரபினரை அழித்துள்ளனர் அல்லது அவர்களுடன் உடல் ரீதியாக உறவு வைத்து புதிய மனிதர்களை உருவாக்கியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications