அமெரிக்காவில் பயங்கரம்.. விளையாட்டாக டம்மி துப்பாக்கியை காட்டிய சிறுமி... சுட்டுக்கொன்ற போலீஸ்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    விளையாட்டாக டம்மி துப்பாக்கியை காட்டிய சிறுமி... சுட்டுக்கொன்ற போலீஸ்

    கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் போலீசாரை நோக்கி விளையாட்டாக டம்மி துப்பாக்கியை காட்டிய சிறுமி, சுட்டுக் கொல்லப்பட்டார்.

    ஹன்னா வில்லியம்ஸ் என்ற 17 வயதுச் சிறுமி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை வெள்ளிக்கிழமை போலீசார் வெளியிட்டனர். அந்த வீடியோவில், சிறுமி சுடப்பட்ட தருணத்தில் என்ன நடந்தது என்பதை தெளிவாகக் காட்டவில்லை மற்றும் துப்பாக்கிச் சூட்டின் ஆடியோவும் இரைச்சலாக இருந்தது.

    A girl was shot dead in California, She show a dummy rifle Front of Police officer

    சிறுமி ஹன்னா வில்லியம்ஸ், மன அழுத்தத்தைப் போக்குவதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட அவர், போக்குவரத்து விதிகள் அனைத்தையும் மீறியும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் தாருமாறாக ஓட்டிச் சென்றதை ரோந்துப் பணியில் இருந்த போலீஸ் ஒருவர் பார்த்துள்ளார்.

    இதை அடுத்து சிறுமியின் காரை துரத்திச் சென்ற அவர் ஒரு கட்டத்தில் மடக்கினார். அப்போது காரை விட்டு இறங்கிய சிறுமி துப்பாக்கியைக் காட்டவே, தற்காப்பு நடவடிக்கையாக போலீஸ் அதிகாரி சிறுமியை சுட்டார்.

    இதில் சிறுமியின் மார்பு மற்றும் காலில் குண்டு பாய்ந்தது. பிறகு தான் அவர் கையில் வைத்திருந்த துப்பாக்கி போலி என்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அச்சிறுமி உயிரிழந்தார். இச்சம்பவமானது கலிபோர்னியா மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவத்தின் நேரடி வீடியோ காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும், சிறுமி கொல்லப்பட்ட 90 நிமிடங்களுக்குப் பிறகு, அவரது தந்தை, தனது மகள் மாயமானதாக புகார் அளித்த ஆடியோ பதிவும் வெளியிடப்பட்டுள்ளது.

    வீடியோ காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து, ஹன்னா வில்லியம்ஸ் குடும்ப வழக்கறிஞரான லீ மெரிட், கூறுகையில், அவள் அச்சுறுத்துவதாக கொஞ்சம் கூட தெரியவில்லை. உதவி மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தாள். போலீசார் சுட்டது ஏன் என்று தெரிய வில்லை என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+