Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அனிமேஷன் பெண்ணை திருமணம் செய்தால் உதவித்தொகை.. ஜப்பான் நிறுவனம் புதிய சட்டம்

ஜப்பானில் இருக்கும் நிறுவனம் ஒன்று அனிமேஷன் பெண்களை மணக்கும் ஊழியர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: ஜப்பானில் இருக்கும் நிறுவனம் ஒன்று அனிமேஷன் பெண்களை மணக்கும் ஊழியர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த திருமணத்திற்காக அதிகாரப்பூர்வ சான்றிதழ் வாங்கித்தரவும் அந்த நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது.

அதேபோல் இது போன்ற திருமணத்தை எளிதாக பதிவு செய்யும் வகையில் தங்கள் நிறுவன இணையத்தளத்திலேயே விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிறுவனத்தின் இந்த திட்டம் ஜப்பான் முழுக்க வைரல் ஆகி இருக்கிறது.

மேலும் அனிமேஷன் திருமணத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க காரணம் என்ன என்பதற்கும் அந்த நிறுவனம் வித்தியாசமான விளக்கம் அளித்து இருக்கிறது.

ஜப்பானில் அனிமேஷன் திருமணங்கள்

ஜப்பானில் அனிமேஷன் திருமணங்கள்

ஜப்பானில் சில நாட்களாக அனிமேஷன் பெண் கேரக்டர்களை ஆண்கள் திருமணம் செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மேலும் இதற்காக பலர் சொந்தமாக அனிமேஷன் பெண்களை தங்களுக்கு பிடித்த மாதிரி வடிவமைத்துக் கொள்வதும் நடந்து வருகிறது. இந்த நிலையில் அனிமேஷன் பெண்களுடன் நடக்கும் திருமணங்களை அங்கிகரிக்கும் வகையில் ஜப்பானில் இருக்கும் நிறுவனம் ஒன்று புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்ற இருக்கிறது.

சட்டப்பூர்வ அங்கீகாரம்

சட்டப்பூர்வ அங்கீகாரம்

அதன்படி அந்த நிறுவனம் தங்களது நிறுவனத்தின் இணையதளத்தில் அனிமேஷன் பெண்களை திருமணம் செய்வதற்காக விண்ணப்ப படிவத்தை வைத்து இருக்கிறது. அதை பூர்த்தி செய்துவிட்டு யார் வேண்டுமானாலும் எந்த அனிமேஷன் பெண்ணை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். அது சட்டப்பூர்வமாக உண்மையான திருமணமாக அந்த நிறுவனத்தால் அரசு சான்றிதழ்களில் பதியப்படும்.

ஏகபோக வசதிகள்

ஏகபோக வசதிகள்

அனிமேஷன் பெண்களுடன் திருமணம் செய்யும் ஆண்களுக்கு நிறைய வசதிகள் உருவாக்கப்பட இருக்கிறது. அதன்படி அனிமேஷன் கேரக்டரை திருமணம் செய்த ஆண்கள் அந்த அனிமேஷன் உருவான நாளை அதன் பிறந்த நாளாக கொண்டாடி விடுமுறை எடுத்துக் கொள்ள முடியும். மேலும் இவர்களுக்கு மாதம் 4000 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படும். அனிமேஷன் கேரக்டருடன் நன்றாக வாழும் நபர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படும்.

ஏன்

ஏன்

இந்த நிலையில் அனிமேஷன் பெண்களை மணக்கும் ஆண்களுக்கு ஏன் இத்தனை வசதிகள் என்ற காரணத்தையும் அந்த நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி அனிமேஷன் பெண்களை மணக்கும் ஆண்கள் நன்றாக வேலை செய்கிறார்கள் என்றும், மிகவும் கடினமாக உழைக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+