10 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆடைகளுக்கு சொந்தக்காரியான குட்டி குழந்தை “அவயா” - காரணம் இன்ஸ்டாகிராம்!
லண்டன்: லண்டனைச் சேர்ந்த குட்டிக் குழந்தை ஒன்று இன்ஸ்டாகிராமில் மாடலாக கலக்கி வருகின்றது. அந்தக் குழந்தைக்குச் சொந்தமாக 10,000 பவுண்ட்கள் அதாவது இந்திய மதிப்பில் கிட்டதட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஆடைகள் உள்ளனவாம்.
அவயா ஹியூகோ என்கிற ஒன்றரை வயதுக் குழந்தை அணிவதற்கான உடைகளை சுமார் ஐநூறு ஆடை வடிவமைப்பாளர்களால் ஆசையாக உருவாக்கப்படுகின்றன.
இவளுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும், பெரிய நிறுவனங்கள் இலவசமாக வழங்கி வருகின்றன.

60 ஆயிரம் பாலோயர்கள்
இன்னும் மழலை மொழி கூட பேசத் துவங்காத அவயாவின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் 60,000 பேர் இவரை பின் தொடர்கின்றனர்.
போஸ் கொடுக்க ரொம்பப் பிடிக்கும்
இதற்கெல்லாம் காரணம் அவயாவின் அம்மா கார்லி ஆஸ்டன்தான். எப்போதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் அவயாவுக்கு புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க மிகவும் பிடிக்குமாம்.
இன்ஸ்டாகிராமில் வெளியீடு
அதனால் மூன்று மாதக் குழந்தையாக இருந்ததிலிருந்து அவளை அலங்கரித்து எடுக்கும் புகைப்படங்களை அம்மா கார்லி இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றார்.
மாடலாக கலக்கல்
இதனை பெரிய நிறுவனங்களும் பயன்படுத்திக் கொண்டு அவர்களது மாடலாக இருக்கும் இந்த குட்டி அழகிக்கு இலவசமாக உடைகளை வழங்கி அணியவைத்து அழகு பார்க்கின்றனர்.
என் குழந்தை எல்லாருக்குமே அழகு
"எல்லா குழந்தைகளும், அவரவர் அம்மாவுக்கு அழகு எனத் தோன்றுவது வழக்கம்தான். ஆனால், என் குழந்தை அனைவருக்குமே அழகாகத் தெரிகிறாள்" என பெருமையாகக் கூறுகிறார் கார்லே. அவயாவுக்கு இப்போது ஆறு மாதத் தங்கை இருக்கின்றாள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications