For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய தாக்குதலில் கொல்லப்பட்டாரா மசூத் அசார்?

ஜெய்ஷ் இ முகமது தலைவர் தீவிரவாதி மசூத் அசார் இந்திய விமானப்படை தாக்குதலில் சிக்கினார் என்று செய்திகள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மசூத் அசார் நலமோடு, உயிரோடு இருக்கிறார்-ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தகவல்- வீடியோ

    இஸ்லாமபாத்: ஜெய்ஷ் இ முகமது தலைவர் தீவிரவாதி மசூத் அசார் இந்திய விமானப்படை தாக்குதலில் பலியாகிவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால் இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில் இருந்தோ, ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தரப்பில் இருந்தோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தானில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. கடந்த வாரம் இந்த தாக்குதல் நிகழ்ந்தது.

    இதில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் 4 முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான 12 மிராஜ் 2000 விமானங்கள் பாகிஸ்தான் உள்ளே சென்று தாக்குதல் நடத்தியது. ஆனால் இந்த தாக்குலில் யாரும் இறக்கவில்லை என்று பாகிஸ்தான் கூறியது.

    பல கேள்விகள்

    பல கேள்விகள்

    ஆனால் அதே சமயம் ஜெய்ஷ் இ முகமது முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மைதான் என்று ஜெய்ஷ் முகமது அமைப்பின் முக்கியமான தலைவரும், தலைவர் மசூத் ஆசாரின் தம்பியுமான மவுலானா அமர் ஒப்புக்கொண்ட வீடியோ ஒன்றும் வெளியானது. அப்பகுதியை சேர்ந்த மக்களும் இதில் இறந்தவர்களின் உடலை பார்த்ததாக கூறி இருந்தனர்.

    பாக். ராணுவத்திடம் சிக்கும் முன் அபிநந்தன் அனுப்பிய கடைசி ரேடியோ மெசேஜ்?... வெளிவராத புதிய தகவல் பாக். ராணுவத்திடம் சிக்கும் முன் அபிநந்தன் அனுப்பிய கடைசி ரேடியோ மெசேஜ்?... வெளிவராத புதிய தகவல்

    தாக்கியது

    தாக்கியது

    புதிதாக, தற்போது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் இந்த தாக்குதலில் மோசமாக காயம் அடைந்தார் என்று செய்திகள் வருகிறது. பாலகோட் முகாமில் இருந்த அவர் விமான தாக்குதலில் மோசமாக காயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    பலியா?

    பலியா?

    அதேபோல் அவரின் முகாம் மீது இந்தியா குண்டு வீசியதில் மசூத் இறந்ததாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. அதே சமயம் 50 வயதான மசூத் அசார் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்ததாக பாகிஸ்தானிலிருந்து சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறது. இது தொடர்பாக மாறி மாறி இப்படி மூன்று விதமான செய்திகள் வெளியாகி வருகிறது. இதனால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுவரை இல்லாது

    இதுவரை இல்லாது

    ஆனால் மசூத் அசார் நிலை குறித்து அதிகாரப்பூர்வ செய்தி எதுவும் வெளிவரவில்லை. கடந்த வாரம் பாகிஸ்தான் அமைச்சர்கள், அதிகாரிகள் சிலர் மசூத் அசார் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருவதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A lot of speculations triggered on Masood Azhar Whereabouts, Is he really dead in IAF attack?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X